1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜினோடு வெளிவந்துள்ள எக்கோ ஸ்போர்ட்-S!

எக்கோ ஸ்போர்ட்டின் விலை உயர்ந்த வேரியன்டாக வெளிவந்துள்ளது எக்கோ ஸ்போர்ட் S. கூடவே ஸ்பெஷல் எடிஷன் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜினோடு வெளிவந்துள்ள எக்கோ ஸ்போர்ட்-S!

ஃபோர்டு நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவியான எக்கோ ஸ்போர்ட்டின் புதிய மாடல் வெளியாகியுள்ளது. எக்கோ ஸ்போர்ட்-S எனும் இந்த காரின் மூலம், தனது சக்திவாய்ந்த மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடிய 125 bhp பவர் கொண்ட 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம். எக்கோ பூஸ்ட் இன்ஜின் மட்டுமல்லாமல் புதிதாகக் காருக்கு சன்ரூஃப்பையும் கொடுத்துள்ளார்கள். விலை உயர்ந்த வேரியன்டாக இருக்கும் இதில், பெட்ரோல் மட்டுமல்லாமல் 100 bhp பவர் தரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வருகிறது. இந்த இன்ஜின்களோடு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வருகிறது. 

ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்

பிஎம்டபிள்யூ காரில் இருப்பது போன்ற 17 இன்ச் ஸ்மோக் அலாய் வீல், ஸ்மோக்கட் HID ஹெட்லைட்டுகள், 4.2-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டயர் ப்ரெஷர் மானிட்டர் எனப் பல புதிய வசதிகள் வருகின்றன. பனி விளக்குகள், ஹெட்லைட்டு, மற்றும் க்ரில்லை சுற்றிக் கறுப்பு நிற ஹவுஸிங் வருகின்றது. இன்டீரியரை பொருத்தவரை சென்டர் கன்சோல், கதவுகள், சீட்டுகளில் வெளியே பளிச்சென்ற satin orange நிறம் வருகிறது. 

புதிய S மாடலுடன், 'signature edition' எனும் வேரியன்டையும் கொண்டுவந்துள்ளார்கள். ஃபோர்டு. டைட்டேனியம் ப்ளஸ் வேரியன்ட்டில் உருவாகியிருக்கும் இந்தக் காரில், 123 bhp பவர் தரும் 1.5 லிட்டர் டிராகம் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100 bhp பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வருகிறது. இந்தக் காரிலும் சன்ரூஃப் வந்துவிட்டது. 17 இன்ச் அலாய் வீல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் ஸ்பாய்லர், ஸ்மோக்கட் ஹெட்லைட், கறுப்பு நிற ஹவுஸிங் கொண்ட பனி விளக்குகள், க்ரோம் க்ரில் எனக் கூடுதல் மாற்றங்களோடு வந்துள்ளது. இன்டீரியரைப் பொருத்தவரை, நீல நிற சீட் தையல், சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வருகிறது. 'signature’ எனும் பேட்ஜும் உள்ளது. 

ஸ்பெஷல் எடிஷன்

பெட்ரோல் இன்ஜின் மாடல்களைப் பொருத்தவரை எக்கோ ஸ்போர்ட்- S ரூ.11,37,300 மற்றும் எக்கோ ஸ்போர்ட் signature edition ரூ.10,40,400 எனும் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டீசல் மாடல்கள் ரூ.10,99,300 மற்றும் ரூ.11,89,300 விலையில் வந்துள்ளன. இரண்டு கார்களிலுமே பாதுகாப்புக்கு ஏபிஎஸ் மற்றும் 6 ஏர்பேக் வந்துள்ளது. 

Ford EcoSport S

(படம் - autocar.com)

ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட், மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, மற்றும் டாடா நெக்ஸான் கார்களுடன் போட்டிபோடுகிறது. புதிதாக வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா காருடனும் இது போட்டிபோடவுள்ளது. நெக்ஸான் மற்றும் பிரெஸ்ஸா சமீபத்தில் AMT மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்தது. தற்போது வந்திருக்கும் எக்கோ பூஸ்ட் இன்ஜின் ஃபோர்ட்டை தனித்துக் காட்டுவதாக உள்ளது. அதிக மைலேஜ், குறைந்த  Co2 வெளியீடு போன்ற அம்சங்களினால் தொடர்ந்து 6 ஆண்டுகள் ’International Engine of the Year’ விருதைப் பெற்ற இன்ஜின் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!