Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எத்தனை வருடத்துக்கு ஒரு முறை பெயின்ட் செய்யணும் தெரியுமா?​ (sponsored content)

வீட்டை வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்துவது முக்கியம், ஏனென்றால் அங்குதான் நாம் நம்முடைய வாழ்நாளின் பெரும்பகுதியை கழிக்கவுள்ளோம். வீட்டுக்கு வெள்ளையடித்தல் பற்றிய கேள்விகளை நம் வாசகர்கள் கேட்டுள்ளனர், அதற்கு ஆசியாவின் நமபர் ஒன் பெயின்ட் நிறுவனமான "நிப்பான் பெயின்ட்"-இன் பெயின்டிங் வல்லுனர்கள் பதிலளித்துள்ளனர்.

எத்தனை வருடத்துக்கு ஒரு முறை வீட்டைப் பெயின்ட் செய்ய வேண்டும்?
- ஆறுமுக பிரேம், காயாமொழி

நாளடைவில் வீட்டுச் சுவரின் பெயின்ட் பரப்பு பெயர்ந்து உதிர்ந்து போகிறது, அழுக்கு, கீறல்கள் மற்றும் ஈரப்பதமும் சுவரைப் பதம் பார்க்கின்றன. வெளிச்சுவர் சூரிய ஒளி & வெப்பம், மழை மற்றும் குளிரால் பாதிக்கப்படுகிறது; நாளடைவில் பொலிவை இழக்கிறது. எனவே மூன்று வருடத்துக்கு ஒருமுறை வீட்டின் உள்ளும், தேவைக்கேற்ப 4 முதல் 7 வருடத்துக்கு ஒருமுறை வெளிப்புறத்துக்கும் பெயின்டிங் செய்வது இன்றியமையாதது. நிப்பான் நிறுவனம் வழங்கும் 'சுமோ' மற்றும் 'வெதர்பாண்ட் அட்வான்ஸ்' ரக பெயின்டுகள் முறையே 4 மற்றும் 7 வருடங்கள் நீடித்து உழைக்கக்கூடியது. இந்த பெயின்ட்களின் சிறப்பம்சங்கள்: தண்ணீரைத் தடுக்கும் ஆற்றல் மற்றும் கலர் லாக் டெக்நாலஜி.

இது வெயில்காலம், உஷ்னத்தைத் தவிர்க்க எவ்வாறு பெயின்ட் செய்ய வேண்டும்?
- வி.என். வைசாக், சென்னை

வெளிர் நிறத்தில் பெயின்ட் செய்வதால் உஷ்ணம் சற்று குறைந்து காணப்படும். நீலம், பச்சை, மஞ்சள் ஆகியவற்றின் வெளிர் நிறங்களைக் கொண்டு பெயின்ட் செய்வதால் வெப்பக்கதிர்களை உறிஞ்சுக்கொள்ளாமல் தடுத்துவிடும். வெயிலைத் தாக்குப்பிடிக்க வெண்மை நிறம் எப்போதுமே சிறந்தது. ஆனால், உட்புறச் சுவர்களைக் காட்டிலும் மேற்புறக் கூரையில் ஸ்பெஷல் பெயின்ட்கள் பயன்படுத்தும்போது வெப்பத்தை பெரும் அளவு குறைக்கலாம்! நிப்பான் பெயின்ட் ரூஃப் கோட்டிங் இதற்கு உதவுகிறது. இது சூரிய ஒளியை உள்வாங்கிக்கொள்ளாமல் பிரதிபலிக்கும் ஆக்ரிலிக் வகை பூச்சாகும். வெயிலில் வீட்டின் வெப்பத்தைக் குறைக்க பெருமளவு உதவுகிறது!

எங்களின் வீட்டை ஏற்கனேவே சுண்ணாம்பு கொண்டு பூசியிருக்கிறோம், அதன்மேல் பெயின்ட் அடிக்கலாமா?
- ஹரிஷ் ஷங்கர், திருவாரூர்

சுண்ணாம்பு பூச்சின் மேல் பெயின்ட் பூசுவது தவறு. புதிதாக அடிக்கப்படும் பெயின்ட் சுண்ணாம்பு மேல் ஒட்டிக்கொண்டாலும், சில வருடங்களில், ஏன், சில மாதங்களில் கூட பெயர்ந்து உரிந்துவிடும். பெயின்ட் கொண்டு வீட்டை அழகுபடுத்த வேண்டுமென்றால், சுண்ணாம்புப் பரப்பை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிடுங்கள். அதன்பின், மல்டி பர்ப்பஸ் வால்  சீலர் அல்லது ப்ரைமர் அடிக்க வேண்டும். பின்னர் எமுல்ஷன் பெயின்ட் கொண்டு 2 முதல் 3 கோட்டிங் கொடுக்க வேண்டும். வெளிப்புறத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ள பட்சத்தில் சுரண்டியபின் 'நிப்பான் பயோ வாஷ்' கொண்டு மெழுக வேண்டும். இதனால் பூஞ்சை, பாசி மற்றும் நுண்ணுயிரிகள் சுவரை பாதிப்பதில்லை. அதன் பின் வெளிப்புறத்துக்கான எமல்ஷன் பெயின்ட் கொண்டு 3 லேயர்கள் பெயின்ட் செய்யவும்.

வீட்டுக்கு  பெயின்ட் அடிக்கும்போது ஏதாவது குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்ற வேண்டுமா?
- வினோத் குமார், சென்னை

ஆம். வெள்ளையடிப்பது என முடிவு செய்தபின் முதலில் உள் கூரையில் இருந்து ஆரம்பித்து, பின்னர் சுவர்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பெயின்ட் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நேரம்  மிச்சப்படுகிறது. அதேபோல், வெளிச்சுவர்களை பெயின்ட் செய்ய, மழை மற்றும் அதிக வெயில் இல்லாத நாள்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். உள்புறத்துக்கு பெயின்ட் செய்ய வானிலை முக்கிய பொருட்டு இல்லை என்றாலும், வெப்பம் மிதமாக இருக்கையில் வெள்ளை அடிப்பதே நல்லது. வெள்ளையடிக்கும் இடம் காற்றோட்டமாக இருப்பது அவசியம், இதனால் பெயின்ட் விரைவில் உலர்ந்துவிடும், மேலும், நெடித் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். நிப்பான் ஓடர்லெஸ் ஏர் கேர் - Nippon Odourless AirCare பெயின்ட் நெடியில்லாத தரமான பெயின்ட்டாகும். ஓடர்லெஸ் அடித்த ஒரு மணி நேரத்திலேயே சகஜ வேலைகளுக்குத் திரும்பிவிடலாம்.

உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆசிய சந்தையில் நம்பகத்தன்மை மற்றும் தரத்துக்கு பெயர் போனவையாகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய தயாரிப்புகளை நிப்பான் பெயின்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இவர்களின் "நிப்பான் ப்ரோ ஸ்டோர் - Nippon Pro Store", கைதேர்ந்த பெயின்டர்கள் மூலம் வெள்ளையடிக்கும் சேவையையையும் வழங்கி வருகிறது. மேலும் தகவல்களுக்கு - மின்னஞ்சல்: tu@nipponpaint.co.in; டோல் ப்ரீ எண்: 1800 425 3636; அல்லது 53636 என்ற எண்ணுக்கு Nippon என எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement