Published:Updated:

ஐதராபாத் சம்பவம்... காவல் துறையின் தோல்வி அல்ல: ஷிண்டே

ஐதராபாத் சம்பவம்... காவல் துறையின் தோல்வி அல்ல: ஷிண்டே
ஐதராபாத் சம்பவம்... காவல் துறையின் தோல்வி அல்ல: ஷிண்டே
ஐதராபாத் சம்பவம்... காவல் துறையின் தோல்வி அல்ல: ஷிண்டே

ஐதராபாத்: ஐதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தை, காவல்துறையின் தோல்வி என்று கூறமுடியாது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுகள் வெடித்தனர். இந்தத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை இன்று 15 ஆக அதிகரித்தது. இச்சம்பவத்தில் 119 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சம்பவ  நடைபெற்ற இடத்தை இன்று காலை நேரில் பார்வையிட்டார். அவர், குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன்னர் குண்டுவெடிப்பு குறித்து பொதுவாக எச்சரிக்கை கிடைத்தது. அது தொடர்பாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், குறிப்பாக ஐதராபாத்தில் தாக்குதல் நடக்கும் என உளவுத் தகவல் கிடைக்கவில்லை.

இந்தக் குண்டு வெடிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில அரசு தனிப்படை அமைத்துள்ளது. அந்த விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு தகவல்களை பகிர முடியாது.

இந்தக் குண்டு வெடிப்பு மூலம் காவல்துறை கடமையை தவறிவிட்டதாக கூற முடியாது. பலியானோர்கள் குடும்பத்தினர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கும்" என்றார் ஷிண்டே.

இதனிடையே, ஐதராபாத் நகரம் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.