Published:Updated:

ஐதராபாத் குண்டுவெடிப்பு: மத்திய அரசு மீது சுஷ்மா சாடல்!

ஐதராபாத் குண்டுவெடிப்பு: மத்திய அரசு மீது சுஷ்மா சாடல்!
ஐதராபாத் குண்டுவெடிப்பு: மத்திய அரசு மீது சுஷ்மா சாடல்!
ஐதராபாத் குண்டுவெடிப்பு: மத்திய அரசு மீது சுஷ்மா சாடல்!

புதுடெல்லி: ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், அரசின் அறிக்கையால் எவ்வித பலனும் இல்லை என்றார்.

ஐதராபாத்தில் வியாழக்கிழமை நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 16 பேர் பலியாகினர் 117 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 4 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து விவாதத்தின்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், "இது அரசின் வழக்கமான அறிக்கையாக உள்ளது. இந்த அறிக்கையினால் எந்த ஒரு பயனும் இல்லை. வழக்கமான அறிக்கை மட்டும் போதுமானது அல்ல. குண்டுவெடிப்பை தடுக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, "தீவிரவாத தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இருந்ததா? தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத் துறையின் எச்சரிக்கை ஆந்திரா அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் ஏன் குண்டு வெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று அவர் கேள்விகளை அடுக்கினார்.