Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

போர்டை பார்த்து நோட்டில் எழுத ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கான டிப்ஸ்! #GoodParenting

ன்னும் இரண்டு வாரங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்போகின்றன. 'கண்ணா, அம்மு' என்று செல்லம் கொஞ்சி எழுப்பி, பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குள், அம்மாக்களுக்குக் கண்கள் வரை வியர்த்துவிடும். இதில், சி.பி.எஸ்.இ.யில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அம்மாக்களுக்குக் கூடுதல் மனச்சுமை. காரணம், யு.கே.ஜி வரைக்கும் ஆக்டிவிட்டீஸ், படங்கள் பார்த்து படிப்பது என இருந்தவர்களுக்கு, கை மணிக்கட்டு வலிக்க எழுதவைப்பது. ஆம்! முதல் வகுப்பிலிருந்து கரும்பலகையைப் பார்த்து எழுத வேண்டும். ஒரு குழந்தை இதைச் சூட்டிகையாக செய்துவிடும். இன்னொரு குழந்தை, நிதானமாகச் செய்யும், மற்றொரு குழந்தை எழுதமுடியாமல் தவிக்கும். இன்னும் இரு வாரங்களில் சந்திக்கப்போகிற இந்தப் பிரச்னையைக் குழந்தைகள் சுலபமாக கடக்க, பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் தருகிறார் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் (கடலூர்) பள்ளியின் ஆசிரியர், ரொமிலா பென் வில்சென்ட்.

குழந்தை

``ஐந்து வயது வரை குழந்தைகளின் மணிக்கட்டு எலும்பானது முழுமையாக வளர்ந்திருக்காது என்பதால், கின்டர் கார்டன் குழந்தைகளை ஏ,பி.சி.டி மற்றும் ஒன், டூ, த்ரீ மட்டும்தான் எழுதப் பழக்குவோம். இதற்கு மேல் குழந்தைகளை ஃபோர்ஸ் செய்தால், பென்சிலை விட்டெறிந்துவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், முதல் வகுப்பு வரும்போது, அவர்கள் பிளாக்போர்டில் இருப்பதைப் பார்த்து எழுதித்தான் ஆகவேண்டும். அதேநேரம், ஐந்து அல்லது ஐந்தரை வயதுப் பிள்ளைகளுக்கு ஏற்றபடி அளவாக எழுதக்கொடுப்பது, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் கைகளில்தான் இருக்கிறது. மற்றபடி, பிளாக்போர்டில் டீச்சர்ஸ் எழுதிப்போடுவதை, பிள்ளைகள் சரியாக எழுத, அம்மாக்களும் சில பயிற்சிகளைத் தரலாம். ஆசிரியர்

முந்தைய தலைமுறையில் பொரியையும் கடலையையும் ஒன்றாகக் கலந்துவிட்டு, அவற்றைத் தனித்தனியாகப் பிள்ளைகளைப் பிரிக்கச் சொல்வார்கள். அதையே கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்கிறேன்.  ஒன்றிரண்டு நாள்கள், அளவில் பெரிய தானியங்களை ஒன்றாகக் கொட்டி, ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் மெதுவாகச் செய்யும் பிள்ளைகள், தானியங்களை வேகவேகமாகப்  பிரிக்கும் வரை பிராக்டிஸ் செய்யவையுங்கள். கைவிரல்கள் வேகத்துக்குப் பழகும்.

முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளால் இரண்டு வரிகளுக்குள்ளோ அல்லது நான்கு வரிகளுக்குள்ளோ கண்டிப்பாக சரியாக எழுதமுடியாது. பொடிசுகளின் கையெழுத்துகள், கோடு தாண்டி நிறைய குறும்புகள் செய்யும். இதற்கு, இந்த விடுமுறை நாள்களில் பிள்ளைகளை நிறைய கலரிங் செய்யவையுங்கள். முடிந்தளவு படங்களின் அவுட்லைனைத் தாண்டி, கலர்ஸ் போகாதபடிக்கு டிரெய்ன் பண்ணுங்கள். பிள்ளைகளுக்கு இது ஃபன். நமக்கோ கோட்டைத்தாண்டி அவர்கள் எழுதாமல் இருப்பதற்கான டாஸ்க்.

படங்களை டிரேஸ் எடுக்கவைப்பதும், கோடு தாண்டி பிள்ளைகள் எழுதாமல் இருப்பதற்கான பிராக்டிஸ்தான். இப்படிக் கோடுகளுக்குள் சரியாக எழுதினாலே, அவர்களை அறியாமல் வேகமாக எழுதக் கற்றுவிடுவார்கள்.

in, an, to, us போன்ற இரண்டெழுத்து வார்த்தைகளும்,  can, tan, hug, son, hen போன்ற மூன்றெழுத்து வார்த்தைகளும் யு.கே.ஜி.யில் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்த ஒன்றரை மாத விடுமுறையில், குழந்தைகள் இவற்றைச் சுத்தமாக மறந்திருப்பார்கள். அவற்றையெல்லாம் மறுபடியும் சொல்லிக்கொடுங்கள். முடிந்தளவு எழுதவைத்தும் பிராக்டிஸ் கொடுங்கள். தவிர, ' Sight words' என்று சில பள்ளிகளில் தந்திருப்பார்கள். அதையும் பிள்ளைகளால் கிரகித்துக்கொள்ளும் அளவுக்கு மட்டும் சொல்லிக்கொடுங்கள். அப்படிச் சொல்லித்தரும்போது, ஒவ்வொரு எழுத்தின் கீழும், விரல்களை வைத்து பிள்ளைகளைப் படிக்கவையுங்கள். எழுத்துகள் மனதில் நன்குப் பதியும். இப்படி மனதில் பதிந்த எழுத்துகளை போர்டில் பார்த்து, நோட்டில் எழுதுவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். 

எழுதுதல்

ஒருவேளை உங்கள் பிள்ளை, போர்டை பார்த்து வேகமாக எழுதக் கஷ்டப்பட்டால், சூரிய ஒளியானது பிளாக்போர்டில் பட்டு எதிரொலிக்கிறதா என்று விசாரியுங்கள். நீங்களே சென்று பார்த்துவிடுவது இன்னும் நல்லது. இப்படி நிகழ்ந்தாலும், பிள்ளைகள் எழுதுவதற்குச் சிரமப்படலாம். கண்களில் பிரச்னை இருந்தாலும் எழுதச் சிரமப்படுவார்கள். அதையும் கவனியுங்கள்.

உங்கள் பிள்ளை, மற்றப் பிள்ளைகளைவிட மெதுவாகத்தான் எழுதுவான் என்றால், அதை டீச்சரிடம் பேசி, அவர்களின் உதவியையும் நாடலாம். இன்றைக்கு எல்லாப் பள்ளிகளிலும் வகுப்புவாரியாக வாட்ஸ்அப் குரூப் இருப்பதால், மற்ற பிள்ளைகள் எழுதியதை, அவர்களின் அம்மாக்களை வாட்ஸ்அப் செய்யச் சொல்லலாம். உங்கள் பிள்ளை படிக்கும் ஸ்கூலில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் திறனைத் தாண்டி, அதிகமாகப்  பாடங்கள் கற்றுத் தருகிறார்கள் என்றால், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, பள்ளி நிர்வாகத்திடம் பேசுங்கள். இந்த விஷயத்தைச் சுலபமாக கடந்துவிடலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement