எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

இதனை மிகவும் தீவிரமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு தீர்த்துவைக்கவில்லை என்றால் பல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

ஏப்ரல், 2018 மாதத்துக்கான இந்திய ஏற்றுமதி புள்ளி விவரங்களை ஒப்பிட்டு, ஃபியோ தென் மண்டலத் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறும்போது, ``தொழிலாளர் உழைப்பு சார்ந்த துறைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளின் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்திருப்பது பொருளாதாரத்துக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, ஏற்றுமதி வளர்ச்சி குறைவை உடனடியாக தடுத்து நிறுத்துவது அவசியமாகும். 

எம்.எஸ்.எம்.இ.

செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக எம்.எஸ்.எம்.இ துறை பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. சரியான நேரத்தில் நிதி மற்றும் நிதி உதவி கிடைக்காதது, நிதித் திரட்டுவதற்கான செலவு அதிகரிப்பு, திரும்ப வர வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலையில் இருப்பது போன்றவை செயல்பாட்டு செலவுகள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன. இவை தவிர, பெரிய ஏற்றுமதிச் சந்தைகளில் சந்தித்துவரும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அண்டை நாடுகளின் தீவிரமான போட்டி போன்றவற்றாலும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயத்த ஆடைகள் துறையில், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டு ஏப்ரலில் இந்தத் துறையின் ஏற்றுமதி 24.40% குறைந்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் துறைகளின் சிறந்த முயற்சிகளையும் தாண்டி, ரீஃபண்ட் நிலுவையில் இருப்பது, ஜிஎஸ்டிஎன்(GSTN) பிரச்னை மற்றும் புள்ளி விவரங்கள் ஒருங்கிணைக்கப்படாமல் நீடிக்கிறது, இதை மிகவும் தீவிரமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு தீர்த்துவைக்கவில்லை என்றால் பல எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்படும். வளர்ந்து வரும் துறைகளான வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்திருப்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும், ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சி காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!