Published:Updated:

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: 6 தனிப்படைகள் அமைப்பு!

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: 6 தனிப்படைகள் அமைப்பு!
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: 6 தனிப்படைகள் அமைப்பு!
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: 6 தனிப்படைகள் அமைப்பு!

ஹைதராபாத்: ஹைதராபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் அனுராக் சர்மா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் பல தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வழக்கு விசாரணை தேசியப் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் குண்டுவைத்த தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்

இதனிடையே 16 பேர்களை பலிகொண்ட ஹைதராபாத் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்  யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக துப்பு துலக்கி வருகிற நிலையில்,  அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் சந்தேக நபர் ஒருவர்  சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த தில்சுக்நகர் பகுதி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு  கேமரா ஒன்றை காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்ததில், இது தெரியவந்ததாகவும்,  இது இவ்வழக்கு விசாரனையில் துப்பு துலங்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்குறியாக சாய்பாபா கோயில்

ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின்  முதல்குறியாக சாய்பாபா கோயில் இருந்துள்ளது என்று காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

##~~##
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு நிகழ ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான்,  ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அனராக் ஷர்மா சாய் பாபா கோயிலுக்கு  சென்றுள்ளார். இதையடுத்தே, பயங்கரவாதிகள் தங்களது குண்டு வெடிப்பு திட்டத்தை  தில்சுக் நகரின் மற்றொரு பகுதிக்கு மாற்றியுள்ளனர் என்று காவல்துறை  தெரிவித்துள்ளது.
பொதுவாக வியாழக்கிழமை நாட்களில் சாய் பாபா கோயிலில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் குவிவது வழக்கம். அதை குறி வைத்தே, பயங்கரவாதிகள் சாய்பாபா கோவிலில்  வியாழக்கிழமை குண்டு வைக்க திட்டமிட்டனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக காவல்துறை ஆணையர் அங்கு சென்றதால், அத்திட்டத்தை  குண்டுவைத்தவர்கள் கைவிட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.