பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

`தமிழ்நாடு அரசியலில், மு.க.அழகிரிக்கு சீஸன்-2 ­தொடங்கிவிட்டது' என்பதுதான் கோபாலபுரத்தின் சமீபத்திய ஸ்கூப் தகவல். ஒரே வாரத்தில் கருணாநிதியை இரண்டு முறை சென்னை வந்து சந்தித்த அழகிரி, `அப்பா, அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். எனக்கு அவர் மீது எப்போதுமே கோபம் இல்லை. அவருக்கும் என் மேல் கோபம் இல்லை' என்று கட்சி சீனியர்களிடம் கூறியிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுள்ள அழகிரி, தமிழகம் வந்ததும் கட்சிக்குள் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள். `ஆனா' ரிட்டர்ன்ஸ்!

ராணுவ அமைச்சர்கள், பொதுவாக அமைதியாக இருப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரீக்கருக்கு, ஏதாவது பேசி பிரச்னையில் மாட்டிகொள்வதே வழக்கமாகிவிட்டது. பாகிஸ்தான் எல்லையில் `சர்ஜ்ஜிக்கல் அட்டாக்' நடந்ததும் பாரீக்கரின் படத்தை போஸ்டரில் போட்டு, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் விளம்பரம் செய்ய, அதிர்ந்துபோனார் பிரதமர் மோடி. இதற்கிடையே சொந்த மாநிலமான கோவாவில், பாரீக்கரைப் பாராட்டி அவரது ஆதரவாளர்கள் மாபெரும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ய, உடனடியாக அமித்ஷா மூலம் பேரணிக்குத் தடா போட்டுவிட்டார் மோடி. `பாரீக்கர், அதிக நாட்கள் மத்திய அமைச்சராக இருக்க மாட்டார். மீண்டும் கோவாவுக்கே அனுப்பப்படுவார்' என்பதுதான் டெல்லி சொல்லும் செய்தி. ஏத்திவிட்டு ஏத்திவிட்டே..!

இன்பாக்ஸ்

ப்பா சிரஞ்சீவி வீட்டில் இருந்து வெளியே தனி வீட்டுக்கு வருகிறார் ராம்சரண் தேஜா. அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவைத் திருமணம் செய்துள்ள ராம்சரண், 80 கோடி ரூபாய் செலவில் புதிய வீட்டைக்  கட்டியிருக்கிறார். இந்த சொகுசு பங்களா, ஜிம், நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், தியேட்டர்... என சகல வசதிகளுடன் தயாராகிவருகிறது. இவ்ளோவும் தனி ஒருவனுக்கா!

இன்பாக்ஸ்

`எனக்கு பாலிவுட்டில் நடிக்க மிகவும் பிடிக்கும். ஆனால், வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால் அது நம்மை உயர்த்தும். இல்லையென்றால், பாலிவுட் மொத்தமாக நம்மை சினிமாவைவிட்டே துரத்திவிடும்' என ஃபீலிங் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் இலியானா. பாலிவுட் பிராப்ளம்ஸ்!

இன்பாக்ஸ்

`26 வயதான என்னால், மீண்டும் களம் திரும்ப முடியாது. எனது விளையாட்டு வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்று சிலர் நினைக்கிறார்கள். என் ஆழ்மனதிலும் எனது பேட்மின்டன் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதோ என்கிற எண்ணம் வரும். ஆனால், விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அறுவைசிகிச்சை முடிந்ததும் மீண்டும் உடல் தகுதியைப் பெறுவதற்கான பயிற்சிகளில் இருக்கிறேன். காயங்கள் மிகவும் வேதனையானவை. ஒலிம்பிக்கில் காயம் அடைந்தது, என் விளையாட்டு வாழ்க்கையை அசைத்துப்போட்டுவிட்டது. இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று அல்ல, அடுத்த ஆண்டு எப்படிச் செயல்பட முடியும் என்பதில்தான் என் எண்ணம் இருக்கிறது' என சாய்னா நேவால் பேட்டி கொடுக்க, விளையாட்டு உலகமே திரண்டு வந்து `சாய்னா நீங்க மீண்டும் விளையாடுவீங்க... ஜெயிப்பீங்க..!' என நம்பிக்கை அளித்திருக்கிறது. பழைய சாய்னாவா வரணும்!

இன்பாக்ஸ்

யுவராஜ் வெட்டிங் இன்வைட்தான் இப்போது வைரல். `யுவராஜ் - ஹேசல் பிரீமியர் லீக்' என திருமணத்துக்குப் பெயர் வைத்ததில் தொடங்கி, மணமக்கள் கிரிக்கெட் ஆடுவது போன்ற கேரிகேச்சர், மேட்ச் ஃபிக்ஸிங் என முழுக்க கிரிக்கெட் தீமில் பத்திரிகை அடித்துக் கலக்கியிருக்கிறார்கள். மணமக்கள் பஞ்சாபி-இந்து கலப்பு என்பதால், நவம்பர் 30-ம் தேதி பஞ்சாபி பாணியில் ஒருமுறையும், டிசம்பர் 2-ம் தேதி கோவாவில் இந்து முறைப்படி ஒருமுறையும் என இரண்டு முறை மேளம் கொட்டப்போகிறார் யுவி. இன்னிங்ஸ் சிறக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு