வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (21/05/2018)

கடைசி தொடர்பு:17:58 (21/05/2018)

சமையல் அறையில் இவை கண்டிப்பாக இருக்கணும்!​ - Exclusive Deal

`பொடி போட்டு மயக்குவது' என நாம் சொல்வதுண்டு, எதற்காக இது சொல்லப்படு​கிறது​ என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் தென்னிந்திய சமையல் கலையைப் பொறுத்தவரை உணவு சிறக்க தரமான மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, மல்லி, சீரகம் மற்றும் மிளகுப்பொடி ரொம்ப அவசியம். காரத்துக்கும் சுவைக்கும் மிளகாய்ப் பொடி; நறுமணம், நிறம்​, ​ஜீரண சக்தி, வலி நிவாரணம், ​காயங்களைக் குணப்படுத்தும் தன்மை ​மற்றும் பிற நன்மைகளுக்காக மஞ்சள் பொடி​;​ தமிழக உணவுகளுக்கு சிறப்பு சுவையை அளிக்கும் மல்லிப்பொடி; ஜீரணத்துக்குச் சிறந்தது​ சீரகப் பொடி; நோயெதிர்ப்பு சக்திக்கு மிளகுப் பொடி!​ ​சொல்லும்போதே அஞ்சரைப் பெட்டியின் வாசம் வீசுகிறதல்லவா! இந்தப் பொடிகளை அன்றாட சமையலில் முறையாகப் பயன்படுத்தும்போது சுவையான உணவும், உடலுக்குப் பல நன்மைகளும் கிடைக்கின்றன. இந்த ஒவ்வொரு பொடிக்கு​ம்​ தேவையான பொருளின் தரத்தை ஆய்ந்து, சுத்தப்படுத்தி, வறுத்து, தரமான முறையில் அரைத்து,​ சுகாதாரமாக​ பாக்கெட்​டு​க​​ளில் இட்டு ​ஃ​ப்ரெஷ்ஷா​க,​ மணம் மாறாமல் வழங்குகிறது, தமிழகத்தின் புகழ்பெற்ற நிறுவனமான "ஸ்ரீ கணேஷ்ராம்'ஸ் ​​ ​'777​​'".

பாரம்பரியமான ஒரு நல்ல மதிய உணவு உண்ட முழு திருப்தி பருப்பு பொடி இல்லாமல் கிடைக்குமா? சுடச்சுட ஆவி பறக்கும் சோறில் ஒரு ஸ்பூன் பருப்புப் பொடியைத் தூவி, சுத்தமான 777 நல்லெண்ணெய் அல்லது நெய்யை தேவைக்கேற்ப கலந்து உண்டால், அடடா வாசனையே போதும், கூட இரண்டு வாய் சேர்த்து சாப்பிடத் தோன்றும். பெருங்காய நறுமணத்தோடு அசத்தலான சுவையில் கிடைக்கும் 777 பருப்பு​​ப்பொடி உடலுக்குப் புரதச் சத்தையும் கொடுக்கிறது.

உணவை முடித்துக்கொள்ள ரசம் இல்லாமலா? ஒன்றல்ல... மூன்று வகை ரசத்தைக் கொடுக்கிறது 777. தக்காளி ரசம், பூண்டு ரசம் மற்றும் மிளகு ரசம் என நம் சுவையின் பல்ஸ் தெரிந்து இவற்றை வழங்குகின்றனர். இந்த 3 பிளேவர்களும் ரசம் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன, சட்டியில் இன்ஸ்டன்ட் பேஸ்ட்டைக் கொட்டி, தண்ணீர் ஊற்றி கொதிவைத்தால் சூடான சுவையான ரசம் ரெடி; அதற்கும் நேரமில்லாதவர்கள் பாட்டிலில் கிடைக்கும் இவர்களின் இன்ஸ்டன்ட் ரசத்தை அப்படியே​ சாதத்தில் பிசைந்தும்​ சாப்பிடலாம், அம்புட்டும் பிரமாதமான டேஸ்ட்!

'ஊறுகாய்' என்றாலே 777 தானே!

மாங்காய், எலுமிச்சை, மிக்ஸ்டு ஊறுகாய், மாங்காய்த் தொக்கு, நார்த்தங்காய், கோங்குரா இலைத் தொக்கு, இஞ்சி, பூண்டு, தக்காளி என 18 வகை ஊறுகாய்களை நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் அற்புத சுவையில் வழங்குகிறது 777. இவர்கள் புகழ்பெற்று விளங்கக் காரணமே இவர்களின் தரமான, ருசியான ஊறுகாய்கள்தான் என அடித்துச்சொல்லலாம்! ஒவ்வொறு ஊறுகாயும் நாக்குக்கு இன்ப அனுபவம், 'இருந்தாலும் இதோட டேஸ்ட் இருக்கே' என ஊறுகாய்ப் பிரியர்களை அள்ளி சாப்பிட வைத்துவிடுகிறது!

இது மட்டுமல்லாது எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, புளி சாதம் - இவையனைத்துக்கும் உடனடி சாதக் கலவைகளை வழங்குவதோடு, நம் சமையலறையில் இருக்கவேண்டிய அனைத்துவகை பொடிகள் மற்றும் உடனடி சமையல் சமாச்சாரங்களை சிறந்த தரம் மற்றும் ​நியா​யமான விலையில் கொடுக்கிறது 777. இவர்களின் ரெடிமேட் தொக்குகள், மிக்ஸ் மற்றும் குழம்புகளில், அமிலத்தன்மை குறைவாகவும், இயற்கையான பதனப் பொருள்கள் மட்டுமே பயன்படுத்துவதாலும் செயற்கையான நறுமணப் பொருள்கள் மற்றும் நிறங்களை உபயோகிப்பதில்லை என்பதால் '777'-ன் ஐட்டங்களுக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் கொடுக்கலாம்! இன்னும் தாமதம் எதற்கு, தரமான, சுவையான சமையல் பொருள்களை ஆன்லைனில் இப்போதே வாங்கலாம்.

விகடன் வாசகர்களே, உங்களுக்கு "20% தள்ளுபடி"யும் இருக்கு, பயன்படுத்திக்கோங்க!

தள்ளுபடியை பெற இங்கே க்ளிக் செய்க... : https://www.vikatan.com/special/sgr/

நீங்க எப்படி பீல் பண்றீங்க