Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• பவன் கல்யாண்... டோலிவுட்டின் தல! நடித்ததில் 80 சதவிகிதப் படங்கள் தோல்வி என்றாலும், ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் எப்போதும் டாப் கியரில்தான். தன் ரசிகர்களை மகிழ்விக்க பவன் பிடித்திருக்கும் ரூட்... அடுத்தடுத்து இரண்டு அஜித் படங்களை ரீமேக்குவதே. அதில் ஒன்று `சிறுத்தை' சிவா இயக்கிய `வீரம்’. `காட்டமராய்டு' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், தமன்னா கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இரண்டாவது படம் `வேதாளம்' ரீமேக். இதற்கு அடுத்து தனது 25-வது படத்தை இயக்க, த்ரிவிக்ரமை ஓ.கே செய்திருக்கிறார் பவர் ஸ்டார். படத்துக்கு இசை நம்ம அனிருத். ஆலுமாலு டோலுமாலு..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

• தமிழ் சினிமாவில் இப்போது எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்ப்பது தனுஷைத்தான். ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறார். அவர் தயாரித்த `விசாரணை’ படம் ஆஸ்கர் போட்டியில். ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். `பவர் பாண்டி’ படத்தை இயக்குகிறார். ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்கிறார். இந்த பிஸிக்கு நடுவில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், `விஐபி-2’க்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்துக்கு கதை, வசனம்... தனுஷ். வேலை செய்யும் பட்டதாரி!

இன்பாக்ஸ்

• ஹீரோ தன் மகனுடன் சேர்ந்து நடிக்கும் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது நடிகர் ஜெயம் ரவி. `மிருதன்’ பட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் `டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவியும் அவரது மகன் ஆரவ்வும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். அடுத்த வாரிசு!

இன்பாக்ஸ்

• `எல்லாரும் சந்திக்கணும்னு ஆசை இருந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு அமையலை. நடிகை சாரதாம்மா இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வம் காட்டினாங்க. கொஞ்ச நாளாவே இதைப் பத்தி அடிக்கடி பேசிட்டிருந்தாங்க.  திடீர்னு ஒரு நாள் குறிச்சு, நினைவுக்கு வந்தவங்களை எல்லாரையும் இன்வைட் பண்ணினாங்க. சென்னை டாக்டர்ஸ் கிளப்ல நாங்க மீட் பண்ணினோம். சாரதாம்மா, சச்சு, குட்டிபத்மினி, ஜெயமாலினி, ராஜஸ்ரீ, ராஜசுலோச்சனா, பாரதி, ஷீலா, ஹேமா சௌத்ரி, ஜெயந்தி கண்ணப்பன், நான்... என பெரிய கேங். `நாம எல்லாம் அப்போ...' என்ற நாஸ்டாலஜியா தொடங்கி, அடுத்த வருடச் சந்திப்பை இன்னும் பெருசா பண்ணும் ப்ளானிங் வரை பல விஷயங்கள் பேசினோம்' என சமீபத்தில் நடந்த செவன்ட்டீஸ் பியூட்டிகள் மீட் பற்றி சிலாகிக்கிறார் `70-களின் நயன்தாரா' லதா. அந்த நாள் ஞாபகம்!

• எக்மோர் அல்ஸாமால் எதிரே இருக்கும் அப்பார்ட்மென்ட்தான் சென்னையின் ஸ்டார் அப்பார்ட்மென்ட். இதில்தான் கோலிவுட் செலிப்ரிட்டீஸ் நயன்தாரா, அட்லீ, விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி ஆகிய நால்வரும் தனித்தனி ஃப்ளாட்களில் வசிக்கிறார்கள்.அட்ரஸ் தெரிஞ்சுப்போச்சு!