Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

`எப்படி இருந்த டீம் இப்படி ஆகிடுச்சே!' என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணியாக இரண்டு முறை சாதனை படைத்த ஆஸ்திரேலியா, இப்போது 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 0-3 என ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என அடிவாங்கியிருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் வெறும் 85 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பரிதாபநிலைக்குப் போனது ஆஸ்திரேலியா. ஒரே சோகமா இருக்கே!

இன்பாக்ஸ்

டம் வெளிவருவதற்கு முன்னரே, `2016-ம் ஆண்டின் ஆஸ்கர் நிச்சயம் ஜெனிஃபருக்குத்தான்' என நம்பிக்கையுடன் இருக்கிறது ஜெனிஃபரின் ரசிகப் பட்டாளம். கிறிஸ்துமஸுக்கு வெளியாகவிருக்கும் `பாசஞ்சர்ஸ்' படத்தில் ஜெனிஃபரின் நடிப்பு டாப் க்ளாஸாம். பூமியில் இருந்து புதுக் கிரகத்துக்குப் போகும் 120 ஆண்டுகாலப் பயணத்தில், மனிதர்கள் அனைவரும் ஒரு பெட்டிக்குள் உறங்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், பயணம் முடிய 90 வருடங்கள் இருக்கும் நிலையில் ஹீரோ கிரீஸ் பிராட்டும், ஹீரோயின் ஜெனிஃபர் லாரன்ஸும் கண்விழித்துவிடுகிறார்கள். அண்டவெளியில் தனியே தவித்துக்கொண்டிருக்கும் இவர்கள் பிழைத்தார்களா என்பதே படத்தின் கதை. ஆஸ்கர் அழகி!

இன்பாக்ஸ்

ரசியல்வாதிகள் என்றால் தங்கள் உடல்நலன் குறித்த தகவல்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதை உடைத்திருக்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ட்விட்டரில் மிக ஆக்ட்டிவான சுஷ்மா, கடந்த வாரம் `சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது டயாலிசிஸ் நடைபெறுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சில மருத்துவச் சோதனைகள் செய்துள்ளேன்' என்று ட்வீட் போட, இலவசமாக சிறுநீரக தானம் செய்ய, பல நூறு பேர் சுஷ்மாவுக்கு பதில் ட்வீட் போட்டிருக்கிறார்கள். நல்லது நடக்கும்!

வ்வோர் ஆண்டும் அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை வெளியிட்டுவருகிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. 2016-ம் ஆண்டின் சிறந்த, புதிய வார்த்தையாக `post-truth' என்னும் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. `மக்களின் விருப்பம் என்பது உண்மைகளைக் கடந்து தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளைச் சார்ந்து உருவாகிறது' என்பதுதான் இதன் அர்த்தம். அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து மக்கள் வெளியேற வாக்களித்தபோது, கருத்துக்கணிப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா அதிபராக வெற்றி பெற்றபோது எல்லாம் இந்த `போஸ்ட் ட்ரூத்' உலகம் முழுக்க மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு. மக்கள் தீர்ப்பு!

இன்பாக்ஸ்

`என் கையில் நிறைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன. இனிமேல் அது செல்லாது என நான் கவலைப்படப்போவது இல்லை. அதில் என் ஆட்டோகிராஃப்பைப் போட்டு மக்களுக்குக் கொடுப்பேன்' என கூலாக பேட்டி தட்டியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. நோட்டோகிராஃப்!