மஞ்சப்பைக்கு மாற்று... பெண்களுக்கு வேலைவாய்ப்பு - அசத்தும் ஜெர்மனி சுமித்ரா

``நான் சுற்றுச்சூழல் ஆர்வலர். அது சம்பந்தமாக நிறைய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வேன். அப்படி ஒரு கூட்டத்தில் நட்பானவர்தான் ஶ்ரீகாந்த். சுற்றுச்சூழல் சம்பந்தமாக நிறைய கருத்துகளை இருவரும் பகிர்ந்துகொள்வோம்.

`பாலிதீன் பைகள் மக்குவதில்லை. பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது' எனச் சொல்லிக்கொண்டே இருந்தாலும், லோக்கல் மார்கெட் முதல் மால் வரை எங்கும் பாலிதீன் பைகளே கோலோச்சுகின்றன. இத்தகைய பாலிதீன் பைகளை ஒழிக்க, கலர்ஃபுல் துணிப்பைகள் தயாரிக்கும் பணியைத் தன் நண்பர் ஶ்ரீகாந்துடன் இணைந்து சமூக சேவையாகச் செய்துவருகிறார், ஜெர்மனியில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த சுமித்ரா.மஞ்சப்பை

``நாகரிகம், அழகு என 90 சதவிகிதம் பேர் துணிப்பைகளை எடுத்துச்செல்லத் தயங்குகிறார்கள். பாலிதீன் பைகள், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவுக்கு நம் உடல்நலத்தையும் பாதிக்கும். பாலிதீன் பைகளை வெயிலில் கொண்டுசெல்லும்போது அதில் உள்ள ரசாயனம் உருகி, உள்ளே இருக்கும் உணவுப் பொருளில் கலக்கும். இது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது'' எனச் சமூக அக்கறையுடன் பேச ஆரம்பிக்கிறார் சுமித்ரா.

மஞ்சப்பை

``நான் சுற்றுச்சூழல் ஆர்வலர். அது சம்பந்தமாக நிறைய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வேன். அப்படி ஒரு கூட்டத்தில் நட்பானவர்தான் ஶ்ரீகாந்த். சுற்றுச்சூழல் சம்பந்தமாக நிறைய கருத்துக்களை இருவரும் பகிர்ந்துகொள்வோம். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டதுதான், பாலிதீன் பைகளுக்கு மாற்றுப்பை தயாரிப்பது. அதற்காக, துணிப்பை கான்சப்ட்டில் இறங்கினோம். ஒரே நாளில் முழுவதுமாக எதையும் மாற்றிவிட முடியாது. எனவே, முதலில் பழைய துணிகளில் பை தைத்து நடைமுறைப்படுத்தலாம் என முடிவுசெய்தோம். அதற்காக, பல இடங்களுக்குச் சென்று பழைய துணிகளைச் சேகரித்தோம். அதன்பின், பின்தங்கிய நிலையில் உள்ள பெண் தையல்காரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக பை தைத்துக்கொடுக்க அணுகினோம். நிறைய பெண்கள் சம்மதித்தனர். எங்கள் வேலை இன்னும் எளிதாக மாறியது. 

பைகளை டிசைன் செய்து இதுபோன்று வேண்டும் எனச் சொல்லிவிடுவோம். அவர்களும் தயார்செய்து வைத்திருப்பார்கள். அவற்றை வாங்கி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்வோம். விற்ற முழுத்தொகையையும் அந்தப் பைகளைத் தைத்த தையல்காரர்களுக்கே கொடுத்துவிடுவோம்'' என்கிறார் சுமித்ரா.

இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

புன்னகையுடன் தொடர்கிறார் சுமித்ரா. ``சமூக அக்கறை என்பதைத் தவிர்த்து எந்தப் பதிலும் எங்களிடம் இல்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள். ஓய்வு நேரத்தில் இதைச் செய்கிறோம். நான் இப்போது வேலை காரணமாக ஜெர்மனியில் இருக்கிறேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்தியா வருவேன். ஆன்லைன் மூலமே மக்கள் அனைவரையும் ஒருக்கிணைத்துவிடுகிறேன். மற்ற செயல்பாடுகளை சென்னையிலிருந்து ஶ்ரீகாந்த் பார்த்துக்கொள்வார். இப்போது, நிறைய கார்ப்பரேட் கம்பெனிகளில் ஸ்டால்கள் அமைக்கிறோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்து, துணியில் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். அந்தப் பொம்மைகள் மூலம் கிடைக்கும் தொகையைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் செலவிடப்போகிறோம்.

`எனக்குத் தைக்கவே தெரியாது. பயிற்சி கொடுத்தால் தைக்கிறேன். எனக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தாருங்கள்' எனக் கேட்கும் பெண்களுக்கு, ஏற்கெனவே எங்களுக்குத் தைத்துக்கொடுக்கும் தையல்கார்களின் மூலம் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம். இங்கே தைக்கும் பைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, விற்பனை செய்யும் எண்ணமும் இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். ஆரம்பத்தில், பழைய துணியில் பை என்றதும் பலரும் சிரித்திருக்கிறார்கள். எனக்கும் அது தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நிச்சயம் இது வெற்றி அடையும் என ஶ்ரீகாந்த் நம்பிக்கை அளித்தார். அந்த நம்பிக்கையின் வெற்றி என்றுதான் இதைச் சொல்லவேண்டும். பை தைக்க ஆரம்பித்த காலத்தில், பழைய துணிகளை மொத்தமாக எடைக்கணக்கில் விலை கொடுத்துத்தான் வாங்கினோம். இப்போது மக்களே எங்களை அழைத்துப் பைகளுக்கான துணிகளைத் தருகின்றனர். பாலிதீன் பைகளை ஒழிக்க நாங்கள் எடுத்த நடவடிக்கை, இன்று பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. சமூக ஆர்வலர்களிடமிருந்து பாராட்டும் ஆர்டர்களும் குவிகிறது'' என மனநிறைவுடன் சொல்கிறார் சுமித்ரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!