Published:Updated:

இந்தியாவில் முதன்முறையாக அனைத்து மகளிர் வங்கி!

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக அனைத்து மகளிர் பொதுத் துறை வங்கி க்டோரில் தொடங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

2013-14 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த அனைத்து மகளிர் வங்கிக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மகளிருக்காக மகளிர் அலுவலர்களால் நடத்தப்படும் இந்த வங்கி தொடர்பான அறிவிப்பை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டபோது, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களும் புன்னகை செய்தனர்.