வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (27/05/2018)

கடைசி தொடர்பு:04:30 (27/05/2018)

நால்கோ நிறுவனம் நிகர வருவாய் வளர்ச்சி..!

அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபுட்டுள்ள பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.257 கோடியை நிகர இழப்பாக ஈட்டியுள்ளது.

அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபுட்டுள்ள பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.257 கோடியை நிகர இழப்பாக ஈட்டியுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 4 சதவிகிதம் அதாவது நிறுவனத்தின் லாபம் ரூ.268 கோடியாக வளர்ச்சி கண்டிருந்தது.
இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,611 கோடியிலிருந்து ரூ.2,920 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டில் நால்கோ நிறுவனத்தின் நிகர  லாபம் ரூ.668 கோடியிலிருந்து ரூ.1,342 கோடியாக பன்மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு  ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கிற்கு 20 சதவிகிதம் அதாவது ரூ. 5 டிவிடெண்ட் வழங்க உத்தரவிட்டு்ள்ளது.

வருவாய்

இந்நிறுவனத்தின் லாப வரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மேலும், மார்ச் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. வரும் காலாண்டில் நிறுவனம் லாப பாதையை நோக்கி பயணிக்ககூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.