``சர்ப்ரைஸ் கிஃப்ட்... நயன்தாராவுக்கு கொடுக்கச் சொன்னது யார் தெரியுமா?!" - 'சர்ப்ரைஸ் ப்ளானர்' பிரியங்கா | "Do you know who told to give surprise gift to Nayanthara?" interview with Priyanka

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (28/05/2018)

கடைசி தொடர்பு:09:43 (28/05/2018)

``சர்ப்ரைஸ் கிஃப்ட்... நயன்தாராவுக்கு கொடுக்கச் சொன்னது யார் தெரியுமா?!" - 'சர்ப்ரைஸ் ப்ளானர்' பிரியங்கா

நயன்தாரா மேடத்துக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அவரின் காஸ்டியூம் டிசைனர் எங்களை அணுகினார். 'அவங்களுக்கு மியூசிக்தான் பிடிக்கும்' என்றார். நாங்களும் ஒரு கிட்டார் மியூசிக் ரெடி செய்து பிரசன்ட் செஞ்சோம்

வித்தியாசமாக யோசித்தால், மூலதனம் எதுவும் இல்லாமலே வெற்றிபெற முடியும் என நிரூபித்துள்ளார், சென்னையைச் சேர்ந்த 'மேஜர்ஸ் அண்டு மைனர்ஸ் சர்ப்ரைஸ் பிளானர்ஸ்' உரிமையாளர், பிரியங்கா. நிறைய சினிமா பிரபலங்களுக்கு சர்ப்ரைஸ் பிளான்கள் செய்யும் இவர், தன்னுடைய பிஸினஸ் சீக்ரெட் பற்றியும், பிரபலங்களுடனான அனுபவங்களையும் பகிர்கிறார்.

``நான் என்ன பண்ணினாலும் அதில் புதுசா என்ன கிரியேட்டிவிட்டி கொண்டுவரலாம்னு பார்ப்பேன். அதுதான் எனக்கான அடையாளமா நினைக்கிறேன். அப்படி யோசித்ததுதான், இந்த சர்ப்ரைஸ் பிஸினஸ். நானும் என் கணவரும் இணைந்து சர்ப்ரைஸ் பிளானிங் நிறுவனத்தை நடத்தறோம். இருவருமே வணிகவியல் பட்டதாரிகள். ஏதோ ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்யாமல், நமக்கான வேலைவாய்ப்பை நாமே உருவாக்கணும் என்பதுதான் எங்க கொள்கை. அதுக்காக, நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். எங்களின் நெருங்கிய நண்பருக்குப் பிறந்தநாள் வந்துச்சு. அவருக்கு வெளியிலிருந்து கிஃப்ட் வாங்கிக்கொடுக்காமல், நாமே ரெடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். அந்த நண்பர் அனிரூத் ரசிகர். அதனால், அனிரூத் பாடல்களை ஒருங்கிணைச்சு, கிட்டார் மியூசிக் வாசிச்சு சர்ப்ரைஸ் கொடுத்தோம். அது அந்த அப்பார்ட்மென்ட்டில் இருந்த பலரையும் ஈர்த்துச்சு. 'எங்களுக்கு வேண்டியவர்களுக்கும் இதேமாதிரி பண்ண முடியுமா?'னு கேட்டாங்க. அட... இதையே பிஸினஸா பண்ணலாமே என்கிற புள்ளி விழுந்தது அங்கேதான்'' எனப் புன்னகையுடன் தொடர்கிறார் பிரியங்கா.

``ஆரம்பத்தில் தேடிவந்து கேட்கிறவங்களுக்கு சர்ப்ரைஸ் பிளான் செய்ய ஆரம்பிச்சோம். அப்புறம், சமூக வலைதளங்களில் எங்களின் சர்ப்ரைஸ் பிளான் பற்றி விளம்பரங்கள், செய்திகள் கொடுத்தோம். அதைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்போதுதான் நடிகை சிம்ரனின் நாற்பதாவது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அவர் கணவர் தீபக் எங்களை அணுகினார்.

சர்ப்ரைஸ்

சிம்ரனின் ஆரம்ப படங்கள் முதல் 'வாரணம் ஆயிரம் வரை எல்லாப் படங்களின் பாடல்களையும் இணைச்சு, மேஷ்அப் மியூசிக் ப்ளே செஞ்சோம். சிம்ரன் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகி பாராட்டினாங்க. விக்ரம், சிவகார்த்திகேயன், நித்யா மேனன், கோவை சரளா என நிறைய செலிபிரெட்டிகளுக்கு சர்ப்ரைஸ் செய்யும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைச்சது. 

ஒவ்வொரு செலிபிரட்டியிடமிருந்தும் புதுப் புது அனுபவம் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக பிளான் செய்வோம். அந்த பிளான்களை ஆர்டர் கொடுத்தவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கினதும், சர்ப்ரைஸ் தயார்செய்ய ஆரம்பிச்சுடுவோம். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஆர்வம் நிறைந்த விஷயத்தைத் தேர்வுசெய்து, அது சார்ந்த சர்ப்ரைஸ் கொடுக்கிறது எங்க ஸ்பெஷல். சர்ப்ரைஸை யார் என்ஜாய் பண்ணப்போறாங்களோ அவங்களுக்கு நெருக்கமானவர்களிடம் நிறைய பேசி, பல தகவல்களைத் தெரிஞ்சுக்குவோம். அப்புறம் ஐடியாக்களை உருவாக்குவோம். நாங்க கொடுக்கும் சம்பந்தப்பட்டவங்க  முழு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறதைப் பார்க்கும்போது நிறைவாக இருக்கும். அதுக்காக, எத்தனையோ நாள் தூங்காமல் வேலை செய்திருக்கோம்'' எனத் துள்ளல் குரலில் பிரியங்கா சொல்ல, 'நானும் கொஞ்சம்' என அனுமதி கேட்டு பேசுகிறார் கணவர் தீபக்.

``இந்த பிஸினஸ்ஸை ஆரம்பிக்கும்போது, சின்ன தயக்கம் இருந்துச்சு. ஆனால், நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கு. நிறைய பாராட்டுகள், பல பல அனுபவங்கள். நடிகர் சாந்தனுக்கு அவரின் மனைவி கீர்த்தி சர்ப்ரைஸ் கொடுக்க, எங்களை அணுகினாங்க. நாங்களும் அவரின் வீட்டுக்குப் போய் எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டு சாந்தனுக்காகக் காத்திருந்தோம். சாந்தனு வந்ததும், பாடல்கள் பாடி, கேக் கட் செஞ்சு திக்குமுக்காட வெச்சுட்டோம். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துட்டிருந்த பாக்யராஜ் சார், ரொம்பவே பாராட்டித் தள்ளிட்டார். அது எங்களுக்குப் பெரிய தெம்பு .

நயன்தாரா மேடத்துக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அவரின் காஸ்டியூம் டிசைனர் எங்களை அணுகினார். 'அவங்களுக்கு மியூசிக்தான் பிடிக்கும்' என்றார். நாங்களும் ஒரு கிட்டார் மியூசிக் ரெடி செய்து பிரசன்ட் செஞ்சோம். நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அவங்க எக்ஸைட்மென்ட் ஆகி, எக்ஸலண்ட்ன்னு ஸ்மைலியோடு சொன்னாங்க. எங்க சார்பா கொடுத்த சின்ன ஹோம்மேட் கிஃப்ட்டை ரொம்ப ரசிச்சாங்க. இதைவிட வெற என்ன வேணும். ஐ லவ் யூ நயன்" என்கிறார்.

மாற்றி யோசித்தால் எதிலும் சக்சஸ்தான்!


டிரெண்டிங் @ விகடன்