Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாறுதான் அமீர் கான் நடிக்கும் `தங்கல்’ படம். இது டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் மஹாவீர் சிங்கின் மகள்களில் ஒருவரான கீதாவுக்கு, மல்யுத்த வீரர் பவன்குமாருடன் கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமண விழாவுக்குச் சாதாரணமாக இல்லை... மஹாவீர் சிங் போகத் கெட்டப்பிலேயே சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் அமீர் கான். கெத்து கான்!

இன்பாக்ஸ்

பாரீஸ் ஈஃபிள் டவரின் படிகளில் ஒரு பகுதி, ஐந்து லட்சம் யூரோவுக்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையைவிட பத்து மடங்கு அதிகமாம். `நேரிலும் போனிலும் நடந்த இந்த ஏலத்தில் கலந்துகொண்ட வர்களைப் பார்க்கையில் ஃபிரெஞ்சு கட்டடக் கலையின் மதிப்பு கூடுகிறது' என்கிறார் ஏலத்தை நடத்திய ஃப்ரான்கோஸ் தஜன். பாரீஸ்னாலே பியூட்டிதானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் கிளப்பில் சேர்ந்த முதல் மலையாள சினிமா மோகன்லாலின் `புலிமுருகன்'.இப்போது அது 125 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கிறது. `என் படங்கள் புதிய தளங்களுக்குச் செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், அந்தத் தளம் ஒவ்வொரு காலத்திலும் மாறுகிறது. `சித்ரம்', `மணிச்சித்திரத்தாழு' போன்ற படங்கள் தியேட்டரில் ஒரு வருடம் ஓடியது பெரிதாகப் பேசப்பட்டது, பின்னர் திருட்டு டி.வி.டி இருக்கும் இந்தச் சமயத்தில் `த்ரிஷ்யம்'  100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அதுபோலத்தான் இந்த 100 கோடி ரூபாய் கிளப். ஆனால், இது ஆடியன்ஸுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. அவர்களது தேவை வித்தியாசமான கதைகளும் பொழுதுபோக்கும்தான். அதைத் தொடர்ந்து தருவேன்' என நிதானப் பேட்டி தட்டியிருக்கிறார் லாலேட்டன்.

அடி மனோகரம்!

இன்பாக்ஸ்

விஷால் வீட்டுல விசேஷங்க. விஷாலின் தங்கை ஐஸ்வர்யா வுக்கும், பிரபல நகைக் கடை அதிபரின் வாரிசு கிரித்திஷுக்கும் விரைவில் திருமணம். அண்ணனுக்கு லைன் க்ளியர்!

இன்பாக்ஸ்

`இந்தியாவில் நான்கு இடங்களில் பணம் அச்சடிக்கப்படுகின்றன. அங்கே 24*7 நேரமும் பணம் அச்சடித்தால்கூட அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நிலைமையைச் சீராக்குவது கடினம்' என்கிறது இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம். `கடன்களைக் கொடுப்பது, கடன்களை வசூலிப்பது, பணத்தை ஒரு வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு மாற்றுவது என, வங்கிகள் தங்களுடைய முக்கிய வேலைகள் எதையும்  செய்ய முடியாமல் போவதால் மீண்டும் பொதுமக்களுக்குத்தான் பெரிய பிரச்னை உருவாகும்' எனப் புலம்புகிறார்கள் வங்கி ஊழியர்கள். இதுவும் கடந்துபோகுமா?

இன்பாக்ஸ்

செம அப்செட்டில் இருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். பணமதிப்பு நீக்க விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் சிதம்பரம் பேசத் தயாராக இருந்த நிலையில், ஆனந்த ஷர்மாவை ராகுல் முதலில் பேசச் சொன்னதுதான் காரணமாம். `சிதம்பரம் ஆங்கிலத் தில் பேசுவார். ஆனால், இது தொடர்பாக இந்தியில் பேசினால் தான் அது இந்தியா முழுக்கப் போய் சேரும். சிதம்பரம் இரண்டாவ தாகப் பேசட்டும் எனச் சொன்னேன்' என ராகுல் சொன்ன விளக்கத்தை ஏற்காமல், நாடாளுமன்றத்தில் பேசவே மறுத்துவிட்டாராம் சிதம்பரம். ராகுல் ரூல்ஸ்!