கர்ப்ப கால உடல்மாறுபாடு... உற்சாகமாக்கும் கலர்ஃபுல் ஆடைகள்! பெண் வக்கீலின் புது முயற்சி | Mumbai advocate designs special dresses for pregnant women

வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (29/05/2018)

கடைசி தொடர்பு:13:22 (29/05/2018)

கர்ப்ப கால உடல்மாறுபாடு... உற்சாகமாக்கும் கலர்ஃபுல் ஆடைகள்! பெண் வக்கீலின் புது முயற்சி

``மகப்பேறு காலத்தில் உங்களைக் கூடுதல் அழகுடன் காண்பிக்க, இந்த ஆடைகள் நிச்சயம் உதவும்'' என்கிறார், ஆன்லைன் மூலம் மகப்பேறுகால ஆடைகளை விற்கும், மாமா கடோர் ( Mama couture) நிறுவன உரிமையாளரான ஷ்ரத்தா. மகப்பேறு கால ஸ்பெஷல் ஆடைகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

ர்ப்ப காலம் என்பது, பெண்களுக்கு ஸ்பெஷலான தருணம். அந்தக் காலகட்டத்தில் தன் குழந்தையின் வளர்ச்சிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்வார்கள். தாய்மை நேரத்தில் டயட் மேற்கொள்ளமுடியாத காரணத்தால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். உடல் உறுப்புகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். எனவே, அந்தக் காலகட்டத்தில் எந்த ஆடை அணிந்தாலும் சரியான ஃபிட்டிங்கில் இருக்காது என்பது நிறைய பெண்களின் வருத்தமாக இருக்கும். சில பெண்களுக்கு தன் அழகு குறைந்துவிட்டதோ என்ற எண்ணமும் ஏற்படும். இதை மாற்றும் விதமாக மகப்பேறு காலத்திலும் தாங்கள் விருப்பப்பட்ட ஆடையை கர்ப்ப காலத்தின்போதும், தங்களின் உடல் வடிவமைப்புக்கு ஏற்ப தேர்வுசெய்து அணிந்துகொள்ள அறிமுகமாகியிருக்கிறது மகப்பேறு கால ஆடைகள்.

கர்ப்பக்காலம்ஆடைகள்

மகப்பேறு காலத்தில் உங்களைக் கூடுதல் அழகுடன் காண்பிக்க, இந்த ஆடைகள் நிச்சயம் உதவும்'' என்கிறார், ஆன்லைன் மூலம் மகப்பேறுகால ஆடைகளை விற்கும், மாமா கடோர் ( Mama couture) நிறுவன உரிமையாளரான ஷ்ரத்தா. மகப்பேறு கால ஸ்பெஷல் ஆடைகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

``எனக்குச் சொந்த மாநிலம், பஞ்சாப். பி.எல் முடித்து மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறேன். எனக்கு இயல்பாகவே விதவிதமான ஆடைகள் அணிவதில் ஆர்வம் அதிகம். ஆடையில் புதிது புதிதாக மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து அணிந்து பார்ப்பேன். மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வழக்கமான உடல் அமைப்பு மாறுபாடுகள் எனக்கும் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் எந்த பிராண்டிலும் சரியான ஆடைகள் எனக்கு செட் ஆகவில்லை. கடை கடையாக ஏறி இறங்குவேன். சரியான ஆடைத் தேர்வு இல்லாமல் தாழ்வுமனப்பான்மை வந்தது என்பதுதான் உண்மை. இறுதியாக, நானே டிசைன் செய்துகொள்ள முடிவெடுத்தேன்.

ஷ்ரக்தாஎல்லாப் பெண்களுக்கும் இதே நிலைமைதானே இருக்கும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. அதன்பின் இதையே ஒரு பிஸினஸாக செய்யலாமே என்று தோன்றியது. பல்வேறு தேடுதலுக்குப் பிறகு துணிந்து  களத்தில் இறங்கினேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். என்னுடைய கர்ப்ப காலத்தின் எட்டாவது மாத்தில்தான், பிஸினஸ் செய்வற்காக முடிவுசெய்து பார்ட் டைம்மாக ஆரம்பித்தேன். என் பிஸினஸுக்குத் தேவையான டிசைனர்கள், துணி என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தேர்வுசெய்தேன். எல்லாரும் 'கர்ப்பகாலத்தில் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறே? உடம்புக்கு ரெஸ்ட் கொடு. குழந்தை பிறந்ததும் அதைப் பார்த்துக்கவே நேரம் போதாது. பிஸினஸ் எப்படி?' எனக் கேட்டார்கள். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னால் முடியும் என்று நினைத்தேன். என் குடும்பமும் நிறையவே ஒத்துழைத்தார்கள்.

கர்ப்ப காலத்துக்காக மட்டும் துணி டிசைன் செய்தால் எப்படி விற்கும் எனவும் கேள்வி கேட்டனர். என்னைப் பொறுத்தவரை, கர்ப்ப காலம் என்பது, பெண்கள் தங்களை புதிதாக உணரவேண்டிய ஒரு தருணம். அந்த நேரத்தை இன்னும் ஸ்பெஷலாக ஃபீல் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம் வரை வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கான வழிகாட்டுதலாக என் தொழில் அமைய வேண்டும் என முடிவுசெய்தேன். 2015-ம் ஆண்டு, 'மாமா கடோர்' ஆரம்பித்தேன். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்துக்கு, 4 முதல் 6 மாதம் வரை, 6 முதல் 10 மாதம் வரை எனத் தனித்தனியாக ஆடைகளை டிசைன் செய்கிறோம். மேலும், அலுவலகத்துக்குத் தேவையான ஆடை, நிகழ்வுகளுக்குத் தேவையான ஆடை, பிரக்னன்ஸி போட்டோ ஷூட்டுக்குத் தேவையான ஆடை, வளைகாப்புக்குத் தேவையான ஆடை என வெரைட்டியான ஆடைகளை உருவாக்குகிறோம்.

சிலர், 'எங்களுக்கு எந்த ஆடை செட் ஆகும் என்பது தெரியவில்லை' என்பார்கள். அவர்களுக்கு எங்கள் டிசைனர்களே ஆன்லைன் மூலம் வழிகாட்டும் வசதியையும் செய்கிறோம். என்னுடைய இந்த ஐடியா நிறைய பெண்களுக்குப் பிடித்திருந்தது. பிஸினஸ் ஆரம்பித்த மூன்றே மாதத்தில், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம் ரோடு, ஃபர்ஸ்ட் க்ரை போன்ற பல முக்கிய தளங்களில் பிஸினஸ் விரிவடைந்தது. நல்ல லாபமும் கிடைத்தது. பெண்களின் பாராட்டும் குவிந்தது. இப்போது, மாதம் ஒரு  லட்சம் ரூபாய் இந்த பார்ட் டைம் பிஸினஸில் கிடைக்கிறது" என மகிழ்கிறார் ஷ்ரத்தா.


டிரெண்டிங் @ விகடன்