Published:Updated:

`நான்காண்டுகளாகத் தேடியும் கிடைக்கவில்லை!’ - எம்.ஹெச்.370 விமானத்தின் தேடுதல் பணியைக் கைவிட்ட மலேசியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`நான்காண்டுகளாகத் தேடியும் கிடைக்கவில்லை!’ - எம்.ஹெச்.370 விமானத்தின் தேடுதல் பணியைக் கைவிட்ட மலேசியா
`நான்காண்டுகளாகத் தேடியும் கிடைக்கவில்லை!’ - எம்.ஹெச்.370 விமானத்தின் தேடுதல் பணியைக் கைவிட்ட மலேசியா

`நான்காண்டுகளாகத் தேடியும் கிடைக்கவில்லை!’ - எம்.ஹெச்.370 விமானத்தின் தேடுதல் பணியைக் கைவிட்ட மலேசியா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம்  MH370 கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12:40 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. சுமார் 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களிலிருந்து மாயமானது விமானம். அதில் 12 விமான பணியாளர்கள் உட்பட மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர். 

எப்படி விமானம் மாயமானது, தீவிரவாதிகள் சதியா, இயந்திரக் கேளாறா அல்லது கடலில் வீழ்ந்ததா எனப் பல கேள்விகள் எழுந்தன. இதைத் தேடும் பணியில் சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நவீன ரக கப்பல்கள் மற்றும் விமானங்கள் களத்தில் இறங்கின. சீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துக் கடல் பகுதிகள் மற்றும் தரைப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகளாகத் தேடியும் விமானத்தின் ஒரு பாகம்கூடக் கடலின் அடியிலோ தரையிலோ கிடைக்கவில்லை. எனவே அனைத்து நாடுகளும் தங்களின் தேடுதல் பணியை நிறுத்திகொள்வதாகக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தேடுதல் பணியில் இறக்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டையை மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும். அப்போது மட்டுமே பணம். அதிலும் விமானம் கிடைக்கவில்லையென்றால் இலவச சேவை என்ற கட்டுப்பாடுகளுடன் தேடுதல் வேட்டை தொடங்கியது. ஆஸ்திரேலியா கடல் எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் 8 நீர் மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி இரவு பகலாகத் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. தற்போது வரை விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையிலும், மலேசியா உடனான ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையிலும் விமானத்தின் தேடுதல் பணி கைவிடப்பட்டுள்ளது.  தேடுதல் பணியை மீண்டும் தொடரபோவதில்லை என மலேசியா தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களாகப் பல நாடுகளின் அதிநவீன கப்பல்கள் தேடுதல் பணியில் அணிவகுத்தும் இன்று வரை இது தொடரும் மர்மமாகவே உள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு