Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பிரேசிலைச் சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி `சப்பேகோயன்ஸ்' வீரர்கள், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக கொலம்பியாவின் மெடலின் நகருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். வழியில் விமானம் விபத்தில் சிக்கி, 19 கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் பலி. தற்போது சப்பேகோயன்ஸ் அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள். முழுமையான ஒரு கால்பந்து அணிக்கு 23 வீரர்கள் தேவைப்படுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ரொனால்டினோ, ஓய்வு முடிவுக்கு முழுக்குப்போட்டுவிட்டு சப்பேகோயன்ஸ் அணிக்காக விளையாட முடிவுசெய்துள்ளார். இவரைப் போலவே இன்னும் பல முன்னணி வீரர்களும் சப்பேகோயன்ஸ் அணிக்கு ஆட ஆர்வம்காட்ட... விபத்துச் சோகத்தில் இருந்த பிரேசில் உற்சாகமாகியிருக்கிறது. நம்பிக்கை நட்சத்திரங்கள்!

இன்பாக்ஸ்

ஷாரூக்கானின் இந்த ஃபேமிலி போட்டோதான் கடந்த வார ஆன்லைன் வைரல். இன்டீரியர் டிசைனரான கௌரிகான் எழுதியிருக்கும் `டிசைன் அண்ட் கான்டெம்ப்ரரி லிவிங்' என்ற புத்தகத்தில் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட போட்டோ இது. `என் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் எனத் தேர்ந்தெடுப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. எதுவாக இருந்தாலும் அதில் தீவிரமாக உழைப்பார்கள். எனது ஆசை ஒன்றுதான். அவர்கள், தங்கள் கனவுகளின் மீது அதீத ஆர்வமுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்' என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கௌரிகான். வளர்ப்பு காண்!

இன்பாக்ஸ்

`காதலன்' படத்தில் வந்த `ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி...' பாடலின் சரணங்களை ஓர் இசை நிகழ்ச்சிக்காக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இசைப்புயல். `அந்தப் பாடலுக்கு இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற வரிகளை நீங்களும் கொடுக்கலாம். ஆனால், டொனால்டு ட்ரம்ப், ஹிலாரி கிளின்டனைப் பற்றியும், ரூபாய் நோட்டுப் பிரச்னை பற்றியும் வேண்டாமே' என ஸ்டேட்டஸ் தட்ட, `டி.பி மாத்தியும் லைக் வரலைன்னா... டேக் இட் ஈஸி ஊர்வசி', `ரெஸ்யூம் வாங்கிட்டு கால் பேக்னு சொன்னா... டேக் இட் ஈஸி ஊர்வசி' என கமென்ட்களைக் குவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஊர்வசி, ஒரு ஃபேன்டசி!

இன்பாக்ஸ்

லையாளத்தில் `பிரேமம்', `கலி' படங்களைப்போல் இப்போது தெலுங்கு என்ட்ரிக்கு ரெடியாகி வருகிறார் சாய் பல்லவி. இவர் வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோயினும் ரெடி. சாய் பல்லவியின் தங்கை பூஜா, `காரா' என்னும் குறும்படம் மூலம் நடிப்புக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். `சினிமா என்ட்ரி எப்போது?' என விசாரித்தால், `இன்னும் ஒரு வருஷம் கல்லூரிப் படிப்பு இருக்கு. முடிச்சப் பிறகுதான் மத்ததெல்லாம்'' என கண்டிஷனோடு காத்திருக்கிறார் சிஸ்டர். சின்ன மலர்!

இன்பாக்ஸ்

`என் திருமண வாழ்க்கைப் பற்றியும், நான் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ளப்போகிறேன் என்றும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான பெண் என்பதைத் தாண்டி, எனக்கென ஓர் அடையாளம் இருக்கிறது. திருமணமானதால், கணவர்தான் முக்கியம் என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரி அல்ல. கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான்தான் முக்கியமான நபர். இப்படிச் சொல்வதில் நான் சுயநலவாதி என மக்கள் நினைத்தாலும் கவலை இல்லை' எனப் பொங்கி எழுந்திருக்கிறார் வித்யாபாலன்.கெத்து கேர்ள்!

இன்பாக்ஸ்

லகின் உச்சபட்ச கார் ரேஸ் பந்தயமான ஃபார்முலா-1 ரேஸில் சாம்பியன் பட்டம் வென்ற அடுத்த சில நாட்களிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிக்கோ ராஸ்பெர்க். 31 வயதான ராஸ்பெர்க்குக்கு ஃபார்முலா-1 கார் ரேஸ் சாம்பியன் ஆகவேண்டும் என்பதுதான் 25 வருடக் கனவு. `என் அப்பா ஃபார்முலா-1 சாம்பியன். அவரைப்போல நானும் சாம்பியன் ஆகவேண்டும் என கனவு கண்டேன். ஆனால், அது நிறைவேற 10 வருடங்கள் ஆகிவிட்டன. சாம்பியன் பட்டத்தோடு ஓய்வுபெறுவதுதான் சரியாக இருக்கும். இனி என் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புகிறேன்' என்று ரேஸ் உலகைத் திடுக்கிடவைத்திருக்கிறார் ராஸ்பெர்க். ரியல் சாம்பியன்!

ல்லா பொருட்களுக்கும் டூப்ளிகேட் போடுகிற சீனா, இப்போது `டைட்டானிக்' கப்பலை உருவாக்க இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான இந்த முயற்சியை, சீன அரசு கையில் எடுத்திருக்கிறதாம். கப்பல் கட்டுமான நிறுவனமான வாச்சுவான் குரூப் இதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. ஒரிஜினல் டைட்டானிக்கில் இருந்த டைனிங் ஹால், தியேட்டர், ஆடம்பர அறைகள், நீச்சல்குளம் அனைத்தும் அப்படியே வைத்து உருவாகும் இந்தக் கப்பல், 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் தயாராகிவிடும். ரிசர்வேஷன் உண்டா?