உங்கள் குழந்தைக்கான பெர்ஃபெக்ட் பெற்றோரா நீங்கள்? இந்த விஷயங்களையெல்லாம் செக் செய்து கொள்ளுங்கள்!

உங்கள் குழந்தைக்கு மதிய உணவு அல்லது ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பும்போது, அவர்களுடைய நெருங்கிய தோழிக்கும் தோழனுக்கும் சேர்த்துக் கொடுத்து அனுப்புங்கள். இது, அவர்களுக்குப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை உருவாக்கும்.

உங்கள் குழந்தைக்கான பெர்ஃபெக்ட் பெற்றோரா நீங்கள்? இந்த விஷயங்களையெல்லாம் செக் செய்து கொள்ளுங்கள்!

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்போகின்றன. இத்தனை நாள் இடைவெளிக்குப் பிறகு குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவதில் பெற்றோர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். இனி, குழந்தையின் ஆரோக்கியத்தில் ஆரம்பித்துப் பாதுகாப்பு வரை பல விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவோ, திருப்பி அழைத்து வரவோ பெற்றோர்கள் செல்வது அவசியம். பள்ளி வாகனத்தில் செல்லும் குழந்தைகள் எனில், வாரம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று, உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் பழகும் விதம், பள்ளியின் செயல்பாடுகளில் காட்டும் ஆர்வம் போன்றவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.

பெற்றோர் - குழந்தை

உங்கள் மகன் அல்லது மகள் இடது கை பழக்கம் உடையவராகவோ, வேறு தனித்திறன் கொண்டவர்களாகவோ இருக்கலாம். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டு அவர்களின் தனித்திறனை மாற்ற முயற்சி செய்யலாம். எனவே, ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை வகுப்புகள் மாறும்போதும், அந்த வகுப்பு ஆசிரியர்களைச் சந்தித்து, குழந்தையைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது, உங்கள் குழந்தை தனித்தன்மையோடு சிறந்து விளங்க வழி வகுக்கும்.

உங்கள் பிள்ளையின் பள்ளி டைரியை தினமும் மாலையில் செக் செய்வது அவசியம். பள்ளியில் நடக்கவிருக்கும் தேர்வுகள், விழாக்கள், போட்டிகள் பற்றி அறிந்துகொள்ள முடியும். இவை, உங்கள் குழந்தை பதற்றமின்றி செயல்பட்டு வெற்றிபெற வழிவகுக்கும்.

 உங்கள் செல்லத்துக்கு மதிய உணவு அல்லது ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பும்போது, அவர்களுடைய நெருங்கிய தோழிக்கும் தோழனுக்கும் சேர்த்துக் கொடுத்து அனுப்புங்கள். இது, அவர்களுக்குப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை உருவாக்கும்.

குழந்தை

உங்கள் பிள்ளையை மாலையில் பள்ளி முடித்து வந்ததும், பள்ளியில் அன்று நடந்த சம்பவங்களை ஒருமுறை பொறுமையாகக் கேளுங்கள். மற்ற குழந்தைகளின் மீதோ, வகுப்பு ஆசிரியர் மீதோ உங்கள் குழந்தை ஏதேனும் குறை சொல்லும்பட்சத்தில், அதைத் தெளிவாக ஒருமுறை கேளுங்கள். உங்கள் குழந்தையின் மீது தவறு இருந்தால், அதை அவர்கள் உணரும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள். தவறு இல்லாதபட்சத்தில் அவர்களின் வகுப்பு ஆசிரியரைச் சந்தித்துத் தெளிவு பெறுங்கள்.

 பள்ளி முடித்து வந்ததும், வகுப்புப் பாடங்களை செய்ய உடனே கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆர்வம் நிறைந்த விஷயத்தில் சிறிது நேரம் சுதந்திரமாகச் செயல்படட்டும். மனம் புத்துணர்வு பெற்றதும் பாடங்களில் கவனம் செலுத்தவைக்கலாம்.

அவர்களுக்கான வீட்டுப் பாடங்கள், புராஜெக்டுகளை கூடுமானவரை அவர்களையே செய்ய ஊக்கப்படுத்துங்கள். இது, அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, ஆர்வத்தையும் அதிகரிக்கும்.

மாலையில் நொறுக்குத் தீனியாக பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றைக் கூடுமானவரை தவிருங்கள். சுண்டல், பயறு வகைகளை அடிக்கடி கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள். இது, ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

உங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறீர்கள் எனில், அங்கே அவர்கள் படிக்கவேண்டிய பாடங்களை, டியூஷன் ஆசிரியரிடம் தெரியப்படுத்துங்கள். சில பெற்றோர்கள், டியூஷன் நேரம் முடியும் வரை அங்கேயே இரு என்பார்கள். இது, பிள்ளைகளுக்குப் படிப்பின் மீதே வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே, அவர்கள் படிக்கவேண்டிய பகுதியினை முடித்ததும் அழைத்து வந்துவிடலாம்.

குழந்தைகள்

உங்கள் பிள்ளையை இரவு 10 மணிக்குள் உறங்க பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் அடுத்த நாள் அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படவும், பள்ளியில் பாடங்களின் மீதும் கவனத்தை நிலைநாட்டவும் முடியும்.

இனி, நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!