"​தொழில் தொடங்கலாம் வாங்க" - சேலத்தில்! 

​ஒரு தொழில் தொடங்கி, வீடு வாசல் வசதி என வாழக்கையை மேம்படுத்த முடிந்தால் எப்படியிருக்கும் என ஒவ்வொருவரும் ஏதோவொரு கட்டத்தில் யோசிப்பதுண்டு. இதில் சிலர் எப்பாடு பட்டாவது சொந்தத் தொழில் தொடங்கியே ஆகவேண்டும் என ஆர்வமாக இருந்தாலும், தகுந்த வழிகாட்டல் இல்லாத காரணத்தால் அந்த லட்சியம் நிறைவேறாமல் போகிறது. இனி இந்தக் கவலை தேவையில்லை, விகடனின் "தொழில் தொடங்கலாம் வாங்க" நிகழ்ச்சி உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. புதிதாக தொழில் துவங்குதல் மற்றும் ​​​ஃப்ரான்ச்சைஸ் முறை​ (Franchise) குறித்த விழிப்புணர்வையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது தொழில் தொடங்கலாம் வாங்க. புகழ்பெற்ற தொழில் பிரமுகர்கள் தங்களின் சிந்தனைகளையும் அறிவுரைகளையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர். கடந்த இரண்டு கருத்தரங்களில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக மூன்றாவது நிகழ்ச்சி இப்போது சேலம் மாநகரில் இம்மாதம் (ஜூன்) மூன்றாம் வாரம் நடக்கவுள்ளது. உங்களின் சுயதொழில் குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்!​ அனுமதி முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சியில்...

சுலபமாக தொழிலதிபர் ஆகலாம் - ப்ரான்ச்சைஸ் (Franchise) முறை குறித்த விவரங்கள்,
என்னென்ன தொழில்கள் செய்யலாம்?
ஜெயித்தவர்களின் அனுபவப் பகிர்வுகள்,
முன்னணி தொழில் பிரமுகர்களின் கலந்துரையாடல்,
தொழில் துவங்குதல் குறித்த கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள்.

தொழில் அதிபர் ஆவதற்கான முதல் படியை எடுத்து வையுங்கள்! இப்போதே முன்பதிவு செய்யவும், குறைந்த இடங்களே உள்ளன!​

முன்பதிவிற்கு இங்கு கிளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!