``ஃபேஷன் நகைகள்... வீட்டிலிருந்தே மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறேன்!" அனுபவக் கதை | Karur woman shares her successful business story of making fashion jewellery!

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (02/06/2018)

கடைசி தொடர்பு:16:16 (04/06/2018)

``ஃபேஷன் நகைகள்... வீட்டிலிருந்தே மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறேன்!" அனுபவக் கதை

ஜூவல்லரி மேக்கிங்கில் இப்போ ஜெர்மன் சில்வர் ஜூவல்லரிதான் டிரண்ட். இது மேட் பினிஸ் லுக்கில் இருக்கும். அணிந்துகொண்டால் டிரண்ட்லி லுக் கொடுக்கும்.

திகரித்துவிட்ட விலைவாசியைச் சமாளிக்க, ஒரு குடும்பத்தின் கணவன் மனனவி இருவருமே சம்பாதிக்கும் சூழல் இன்றைக்கு உருவாகிவிட்டது. அதேநேரம், வெளியில் வேலைக்குச் சென்றுதான் சம்பாதிக்க முடியும் என்ற நிலையும் இல்லை. பெண்கள் வீட்டிலிருந்தே சிறுதொழில்கள் மூலம் ஆயிரங்களில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அதற்கு கிராஃப்ட் பெரிதும் உதவுகிறது. சில்க் திரட், டெரகோட்டா, சோப் மேக்கிங், ஃபேஷன் நகைகள் மேக்கிங், டால் மேக்கிங் என கிராஃப்டில் இருக்கும் பல பிரிவுகளை, தங்களுக்கு வருமானம் தரும் தொழிலாக மாற்றிவிட்டனர் பெண்கள். ஜூவல்லரி மேக்கிங் உருவாக்கம், விற்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார்,  கரூரைச் சேர்ந்த வைதேகி.

ஃபேஷன் நகைகள்

``எனக்குச் சொந்த ஊர் கரூர், நான் எம்.சி.ஏ, படிச்சிருக்கேன். இப்போ, கரூரில் சொந்தமாக கிராஃப்ட் பிசினஸ் பண்றேன். முன்னாடியெல்லாம் வீட்டில் இருக்கும் ஆண்கள் சம்பாதித்தாலே குடும்பத்தை நடத்திவிடலாம். இப்போ நிலைமை மாறிடுச்சு. வேலைக்குப் போய் சம்பாதிக்க நினைக்கும் எல்லாப் பெண்களுக்குமே படிப்புக்கு ஏற்ற வேலையும் சம்பளமும் கிடைக்கிறதில்லை. அதையும் தாண்டி, குழந்தைகளைக் கவனிக்கிறதிலும் சிக்கல் உருவாகுது. அதனால், வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கலாம்னு நான் முடிவெடுத்தேன். 

வைதேகிஎனக்குச் சின்ன வயசிலிருந்தே கிராஃப்ட் வொர்க் ரொம்பப் பிடிக்கும். வீட்டிலிருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத பொருள்களில் புதுசு புதுசா ஏதாவது செய்து வீட்டை அலங்கரிப்பேன். அப்படித்தான் ஃபேஷன் நகைகளும் செய்ய ஆரம்பிச்சேன். நானாக நிறைய மாடல்களை உருவாக்கினேன். அதை விஷேச வீடுகளுக்குப் போட்டுட்டுப் போவேன். அதைப் பார்த்து எல்லோரும் பாராட்டுவாங்க. அது எனக்கு ஜூவல்லரி மேக்கிங் மேலே ஆர்வத்தை அதிகமாக்கிடுச்சு. ஜீவல்லரியில் என்ன என்ன டிரண்ட்ஸ் வருதோ, எல்லாத்தையும் தேடித் தேடி கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்'' என்கிற வைதேகி, அதில் மேற்கொண்ட விஷயங்களைச் சொல்கிறார்.

``ஜூவல்லரி மேக்கிங்கில் உள்ள நுணுக்கங்கள் தெரிஞ்சால்தான் நீட்டான நகைகளைச் செய்ய முடியும். அதற்காக, பயிற்சி வகுப்புகளுக்குப் போவேன். யூ-டியூப் பார்த்தும் தெரிஞ்சுக்குவேன். அப்படிக் கற்ற கலையை பிசினஸாக மாற்ற நினைச்சேன். நான் உருவாக்கின நகைகளை எங்கள் தெருவில் உள்ள கல்லூரிப் பெண்கள், உறவினர் வீட்டுப் பெண்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்பனை செஞ்சேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம், என் நெருங்கிய தோழியின் மூலம் ஆன்லைன் பிசினஸ் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மூலம் நகைகளை விற்றேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைச்சது. வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் வந்துச்சு. என் பிசினஸுக்கான ஆன்லைன் பக்கத்தை உருவாக்கினேன். அமேசான், ஃப்ளிப்காட் போன்ற தளங்களில் விற்பனை செய்யும் வாய்ப்பு வந்துச்சு. அதிக முதலீடு இல்லாத என் தொழிலுக்கு நல்ல லாபமும் கிடைச்சது. நிறைய பெண்கள் பயிற்சிக்கு என்னை அணுகினாங்க. வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். வீட்டைவிட்டு வெளியே போகாமலே மாசம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்கிறவர், மேற்கொண்டுள்ள புதுமைகளைச் சொல்கிறார்.

ஃபேஷன் நகைகள்

``ஜூவல்லரி மேக்கிங்கில் இப்போ ஜெர்மன் சில்வர் ஜூவல்லரிதான் டிரண்ட். இது மேட் ஃபினிஷ் லுக்கில் இருக்கும். அணிந்துகொண்டால் டிரண்டி லுக் கொடுக்கும். அதனால், கல்லூரிப் பெண்களின் ஃபேவரைட்டா இருக்கு. இதை உருவாக்குவது கடினமான விஷயமில்லை. தனித்தனியாக விற்கும் செயின், டாலர், ஹூக் போன்றவற்றை வாங்கி, நம் கற்பனைத்திறனுக்கு ஏற்ப அசெம்பிள் செய்யணும்.

பயிற்சி வகுப்புகள், ரீ- சேல், கிராஃப்ட் மேக்கிங் என இப்போ நான் ரொம்ப பிஸி. ஆரம்பத்தில் என் தேவைகளுக்காகச் செய்யத் தொடங்கிய இந்தத் தொழில், இப்போது என் கணவருக்கு இணையாகக் குடும்பச் செலவில் பங்கெடுக்கவும் துணையா இருக்கு. பொருள்களை மொத்த விலைக்கு வாங்கி அசெம்பிள் செய்யும்போது அதிகமான லாபம் கிடைக்கும். ஜூவல்லரி உருவாக்க ஆர்வம் இல்லை. ஆனால், அதைத் தொழிலாகச் செய்யணும் என்கிற பெண்களும் நகைகளை வாங்கி, ரீ- சேல் செஞ்சாலும் லாபம் உண்டு. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் அழகா லாபம் அள்ளலாம்'' என நம்பிக்கையூட்டுகிறார் வைதேகி.


டிரெண்டிங் @ விகடன்