Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கீர்த்தி சுரேஷ் இப்போது டோலிவுட்டிலும் லீடிங்! அக்கட பூமியில் ராமுடன் `நேனு ஷைலஜா' படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர், இப்போது அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார். கொரட்டால சிவா இயக்கத்தில் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் கீர்த்தி. நீ கலக்கு பேபிம்மா!

இன்பாக்ஸ்

`பாபா ராம்தேவ் பயோபிக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என அதிரடித்திருக்கிறார் ரன்வீர் சிங். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில், ரன்வீரும் பாபா ராம்தேவும் கலந்துகொண்டார்கள். கூட்டத்தை கலகலப்பாக்க, ரன்வீர் சிங்கையும் பாபா ராம்தேவையும் டான்ஸ் ஆட மேடைக்கு அழைக்க, `என்னால் டான்ஸ் ஆட முடியாது. ஆனால், யோகா போஸ்களால் திணறடிக்கிறேன்' என ரெடியாக, இறுதியில் பாபாவின் யோகாவே வென்றது. `இப்ப தோத்துட்டேன்னு நினைக்காதீங்க. உங்க பயோபிக் எடுத்தால் அதில் நான்தான் நடிப்பேன் பாபா' என கால்ஷீட்டை கன்ஃபர்ம் செய்திருக்கிறார் ரன்வீர். தீபிகாவுக்கு ரோல் உண்டா?

இன்பாக்ஸ்

ரே கட்சிக்குள்ளேயே கலவரங்கள் கலங்கடிக்கும் இந்தக் காலத்தில், கேரள அரசின் ஒற்றுமை இந்தியா முழுக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கேரள கவர்னர் சதாசிவம், கேரளத்தின் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதால் ஆகிய நால்வரும் ஒரே விமானத்தில் சென்னைக்குப் பறந்து வந்தனர். ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தியதோடு நின்றுவிடாமல், பத்திரிகைகளில் `வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு'- என்ற திருக்குறளை உதாரணம் காட்டி ஜெயலலிதா புகைப்படத்துடன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது கேரள அரசு. நோட் பண்ணுங்க மக்களே!

இன்பாக்ஸ்

`இருட்டிலேயே வாழ்றவன்டா!' என டெரர் என்ட்ரி கொடுத்த அர்விந்த் சுவாமி, இப்போது அடுத்தடுத்த படங்களில் செம பிஸி. `துருவா' படம் மூலம் தெலுங்கிலும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழில் த்ரிஷாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் `சதுரங்க வேட்டை பார்ட்-2'வுக்கு அடுத்து மலையாளத்தில் மம்மூட்டி நடித்த `பாஸ்கர் த ராஸ்கல்' படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் சுவாமி. மலையாள ஒரிஜினலை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார். சுவாமிக்கு நல்ல நேரம்!

 மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் `வேதா இல்லம்', பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகத் திறக்காத இந்த இரும்பு கேட்டுக்குள் நுழைந்துப் பார்க்க, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், வீட்டின் முகப்புப் பகுதியில் இருக்கும் பெரிய ஹால் வரைதான் அனுமதி. ஜெயலலிதா எங்கே நின்று விருந்தினர்களை வரவேற்பார், ஓய்வு நேரத்தில் எங்கே நடப்பார் என்பதை எல்லாம் கைடுபோல கட்சித் தொண்டர் ஒருவர் மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அம்மா ஹவுஸ்னா சும்மாவா!