Published:Updated:

ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை புறக்கணிப்பு: எம்.எல்.ஏ தலைமையில் ரயில் மறியல் ( படங்கள்)

ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை புறக்கணிப்பு: எம்.எல்.ஏ தலைமையில் ரயில் மறியல் ( படங்கள்)
ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை புறக்கணிப்பு: எம்.எல்.ஏ தலைமையில் ரயில் மறியல் ( படங்கள்)

சிவகங்கை: காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க கோரியும், சென்னை-காரைக்குடி வாராந்திர ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தியும் சிவகங்கையில் இன்று கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ குணசேகரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை புறக்கணிப்பு: எம்.எல்.ஏ தலைமையில் ரயில் மறியல் ( படங்கள்)

போராட்டக்காரர்கள் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலை சென்று மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுரை‍‍‍‍‍ -தொண்டி இடையே புதிய ரயில்பாதை அமைக்கக் கோரியும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.

ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை புறக்கணிப்பு: எம்.எல்.ஏ தலைமையில் ரயில் மறியல் ( படங்கள்)

சிவகங்கையில் எம்.எல்.ஏ குணசேகரன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

##~~##
மானாமதுரையில் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, பி.ஜே.பி கட்சிகளைச் சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டனர்.  வழக்கறிஞர், வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் , இரண்டு ஊர்களிலும் இன்று முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

மானாமதுரையில் போதிய நடை மேடை வசதி இல்லாத காரணத்தால், அதை சரி செய்தபின் விரைவில் இரண்டு ரயில்களும் மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தப்படும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் அறிவித்துள்ளார்.

இதனிடையே  பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடிக்கு நீட்டிப்பு செய்ததைக் கண்டித்து, திருச்சியில் வர்த்தகர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

-குள.சண்முகசுந்தரம்

படங்கள்: சாய் தர்மராஜ்