Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கெரட்டின், ரீ-பாண்டிங் - ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்கில் எது பெஸ்ட்?

Chennai: 

வீன காலத்துப் பெண்கள் அனைவரும் தங்களை மெருகேற்றிக்கொள்ள த்ரெட்டிங் (Threading), பெடிக்யூர், மெனிக்யூர், ஃபேஷியல் என, பாதி நாள்களை இதற்கே செலவிடுகிறார்கள். இதனால், படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன பியூட்டி பார்லர்கள். தற்போது `கஸ்டமைசேஷன்' (Customisation) வசதி, விதவிதமான சலுகைகள், தள்ளுபடி என மக்களை ஈர்க்கும்விதத்தில், விளம்பரங்களும் ஏராளமாகக் குவிந்துகொண்டிருக்கின்றன. அதில் இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட் 'ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்'.

ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்


சிக்கலே இல்லாத கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது? சுருள் முடி, எளிதில் சிக்கலாகும் முடி இவற்றைச் சரிசெய்து, சிகையலங்காரத்துக்காகவே நேரத்தைச் செலவழிக்கும் பெண்கள் அதிகம். இதற்கான தீர்வுதான் ஸ்ட்ரெயிட்னிங். ஆண், பெண் என அனைவரும் தங்களின் வளைந்து நெளிந்த முடிகளை நேராக்கிக்கொள்ளும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டனர். இப்போதெல்லாம் பெண்களைவிட ஆண்கள் தங்களின் முடிகளை நேராக்கிக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், இதனால் உண்டாகும் பலப் பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதேயில்லை.

Allu Arjun with Straightened Hair

சிஸ்டின் (Cysteine), கெரட்டின் (Keratin), ஓலாப்லெக்ஸ் (Olaplex), ரீ-பாண்டிங் (Rebonding) என நிரந்தரத்தன்மைக்கேற்ப ஸ்ட்ரெயிட்னிங் வேறுபடும். இதில் மிகவும் ஆபத்தானது ரீ-பாண்டிங். இது அசலான வளைந்த முடி அமைப்பை மாற்றி, நிரந்தர நேரான முடிகளைக் கொடுக்கும். இயற்கை வடிவத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. மிகவும் வலுவான இயற்கை அமைப்பை, அதைவிட பன்மடங்கு திடமான ரசாயனப் பொருள்களைக்கொண்டுதான் மாற்ற வேண்டும். இதனால், நிரந்தர ஸ்ட்ரெயிட்னிங் அதாவது ரீ-பாண்டிங் செய்வதற்கு முன் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஏனெனில், நேராக்கிய முடிகளை மாற்றுவதுக்கு, மேலும் சில யுகங்கள்கூட ஆகலாம்.

ஸ்ட்ரெயிட்னிங் செய்த பிறகு பராமரிப்பு இருக்கே... ஹய்யோன்னு சொல்லவைக்கும்! சல்ஃபேட் (Sulphate) இல்லாத ஷாம்பூ, சூரியன் மற்றும் மாசிலிருந்து பாதுகாப்பு, கட்டாய கண்டிஷனிங் போன்றவை அவசியம். தலையில் சுரக்கும் இயற்கை எண்ணெய் முற்றிலும் நிறுத்தப்பட்டு, கூந்தல் எப்போதும் வறட்சியாகவே காணப்படும். அதேபோல், அத்தனை முடிகளையும் சீராக நேராக்கியதில் அடர்த்தி காணாமல்போய்விடும். முடி கொட்டும் பிரச்னைக்கும் விடுதலையில்லை. இந்தப் பிரச்னைகளைப் போக்க, ஹேர் சீரம் உபயோகிப்பது அவசியம். இது, கூந்தலுக்குப் போதுமான ஈரப்பதத்தைத் தரும்.

மேலும், அதிகப்படியான சூட்டினால் தலையில் சுரக்கும் இயற்கை எண்ணெய் முற்றிலும் உறியப்பட்டு, முடியின் வேர் திடமாகிறது. இதனால்தான், ஸ்ட்ரெயிட்னிங் செய்த பிறகு, முடி பொலிவில்லாமல் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. அதோடு, புதிய முடி வளர்வதும் தடுக்கப்படுகிறது. நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்கில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், பலர் இதுபோன்ற செயற்கைமுறையில் தங்களின் கூந்தலை நேராக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அசலை ஒழித்து/ஒளித்து, அதைப் பராமரிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும் காலத்துக்கும் `ஒரிஜினலே பெஸ்ட்’னு சொல்லவைத்துவிடுகிறது. இதனால், நிரந்தர ஸ்ட்ரெயிட்னிங் செய்யாமல் இருப்பது நல்லது. சிஸ்டின், கெரட்டின், ஓலாப்லெக்ஸ் போன்றவற்றை முயலலாம்.

Deepika Padukone


தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்னிங், பெரும் பிரச்னைகளிலிருந்து ஓரளவுக்கு விடுதலை தருகிறது. இதை இயற்கைப்பொருள்களைக்கொண்டு வீட்டிலேயே செய்துபார்க்கலாம். அதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ...

டிப் 1:

தேவையான அளவு பாலில் 2 அல்லது 3 டீ-ஸ்பூன் தேனுடன், 4 ஸ்ட்ராபெரி பழங்களைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவேண்டும். இந்தக் கலவையைத் தலையில் மெதுவாகத் தேய்த்து, ஒரு துண்டைக்கொண்டு தலையை இறுக்கக் கட்டிக்கொள்ளவேண்டும். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஷாம்பூ தேய்த்து, குளிர்ந்த நீரில் முடியை நன்கு அலச வேண்டும். இது நிச்சயமாக தற்காலிக நேரான முடியைக் கொடுக்கும்.

டிப் 2:

ஆமணக்கு எண்ணெய்யை மிதமாகச் சூடுபடுத்தி, தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்யவேண்டும். பிறகு, மிதமான சூட்டில் ஒரு துண்டை நனைத்து தலையை இறுக்கிக் கட்டிக்கொள்ளவேண்டும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூகொண்டு முடியை அலச வேண்டும்.

இதுபோல சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம், ஆரோக்கியமான ஸ்ட்ரெயிட் கூந்தலை சொந்தமாக்கிக்கொள்ளலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement