Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 `விராத், என்னைவிட இரண்டு மடங்கு ஆக்ரோஷ​மானவர்' என சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. `விராத், ஒரு இன்ச் கூட எதிரிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார். கேப்டனாகவும் ப்ளேயராகவும் கோஹ்லி உச்சம் தொட்டுவிட்டார்' எனப் புகழ்ந்திருக்கிறார் தாதா. குரு புகழ்ச்சி!

இன்பாக்ஸ்

பரபரப்பைக் கிளப்பிய மனிதர்களின் கதைகளைப் படமாக்கி பாப்புலர் ஆனவர் ராம்கோபால் வர்மா. தாவூத் முதல் வீரப்பன் வரை பலருடைய சொந்தக்கதைகள் ராம்கோபால் வழியே திரை கண்டுள்ளன. அவருடைய அடுத்த படம் `சசிகலா' என ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.

` `சின்னம்மா'னு பேரு வைங்க பாஸ். வரிவிலக்கு கிடைக்கும்' என இப்போதே அட்வைஸைத் தட்டியிருக்​கிறார்கள் நெட்டிசன்ஸ்.  தி ட்ரபிள் மேக்கர்!

`நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்' என்ற ஹேஷ்டேக் போட்டுப் புரளிகளைக் கிளப்பி​விடுவதில் ஃபேஸ்புக்குக்கே முதல் இடம். தனது பயனாளர்​களுக்கு இந்தத் தொல்லை கூடாது என முடிவெடுத்​திருக்கிறது ஃபேஸ்புக். நம் டைம்லைனில் வரும் இது மாதிரியான பொய்யான கதைகளை `இது ஃபேக் பாஸ்' என அலெர்ட் செய்ய, புது வசதி கொண்டு வந்திருக்கிறது ஃபேஸ்புக். காரணம் சரியாக இருந்து நிறையப் பேர் ஒரு செய்தியைப் பொய் எனச் சொன்னால், அதை ஃபேஸ்புக்கில் இருந்தே நீக்கிவிடுவாராம் மார்க்.  ரூம் போட்டு யோசிப்பாங்களே ரூமர்பாய்ஸ்!

`டியர் ஜிந்தகி' ஃபீவர், அலியா பட்டை இன்னமும் விடவில்லை. படத்தில், ஒளிப்பதிவாளராக வருவார் அலியா பட். இந்த கான்செப்ட்டில் ஒரு பாடலை உருவாக்கி வைரல் அடித்திருக்கிறது `ஜிந்தகி' டீம். இதில் அலியா பட் அவரே பாடி நடனம் ஆட, அதை இன்னோரு அலியா பட் ஒளிப்பதிவு செய்ய என ரகளை ரணகளமாக்கி​யிருக்கிறார்கள். ஜாலி ஜிந்தகி!

இன்பாக்ஸ்

இசைப் புயல், மீண்டும் ஆஸ்கர் வானத்தை மையம்கொண்டிருக்கிறது. பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலேவின் பயோகிராஃபியான ‘Pele; A Birth Of A Legend’ ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்ததற்காகப் பின்னணி இசை, பாடல் என இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் தேர்வுப்பட்டியலில் இடம்பிடித்​திருக்கிறது. பரிந்துரைக்கான இறுதிப் பட்டியல் 24-ம் தேதி வெளியாகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

`கம்யூனிட்டி லிவிங்' எனப்படும் குழும வாழ்க்கைமுறைதான் டிரெண்ட். அந்தப் பட்டியலில் புது வரவு `ஹவுஸ் போட்ஸ்'. கடந்த எட்டு ஆண்டுகளில் லண்டனில் வீடுகளின் விலை 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். இதற்கு மாற்றாக நதிகளில் படகுகளிலே வாழ்கிறார்கள். ஒரு ஹவுஸ் போட்டை உருவாக்க, ஐந்து லட்ச ரூபாய் செலவாகும். நல்ல சொகுசான ஒரு ஹவுஸ் போட்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை ஆகும். லண்டனில் ஒரு சாதாரண அப்பார்ட்மென்ட் மாத வாடகை மட்டுமே குறைந்தது 70 ஆயிரம் ரூபாய். ஹவுஸ் போட்டில் சோலார் மூலமும் இஞ்ஜின் பேட்டரி மூலமும் கரன்ட் எடுத்துக்கொள்ளலாம். `ஹவுஸ் போட் வாழ்க்கையில், என்னால் நிறையச் சேமிக்க முடிகிறது. அந்தப் பணத்தைக்கொண்டு எனக்குப் பிடித்த மற்ற விஷயங்களைச் செய்ய முடிகிறது. குளிர்காலத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்' என்கிறார் ஹவுஸ் போட்வாசி ஒருவர். வாழ்க்கைப் படகு!

நாக சைதன்யாவுடன் திருமணச் செய்தியை உறுதிப்படுத்தியதில் இருந்து சமந்தா அப்செட். அதன் பிறகு, பட வாய்ப்பே இல்லை என்கிறது சினிமா வட்டாரம். `தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த வருடம் நிறைய ஹிட்ஸ் கொடுத்திருக் கிறேன். என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. பிறகு ஏன் புதிய வாய்ப்புகளே இல்லை என்பதுதான் தெரியவில்லை. அடுத்த வருட இறுதியில்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். ஆனாலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார் சமந்தா. நீ கவலைப்படாத தெறி பேபி!

இன்பாக்ஸ்

கோவையைச் சேர்ந்த வருண் ஆதித்யா என்கிற 25 வயது இளைஞர், நேஷனல் ஜியாகிரஃபியின் இந்த ஆண்டுக்கான சிறந்த வனஉயிரினப் புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்றுள்ளார். மலபார் வனப் பகுதியில் கிரீன்வைன் பாம்பை க்ளிக்கியதற்குத்தான் இந்த விருது. போட்டியில் பங்கேற்ற 20 ஆயிரம் புகைப்படங்களைப் பின் தள்ளிவிட்டு, வருணின் புகைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விருதுடன் 2,500 அமெரிக்க டாலரும் பரிசு. லண்டனில் எம்.பி.ஏ படித்துள்ள வருணின் போட்டோகிராஃபி பயணம் தொடங்கியது, சாதாரண செல்போனில்தான். தாறுமாறு!