வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (07/06/2018)

கடைசி தொடர்பு:09:14 (07/06/2018)

ஆண்ட்ராய்டு ஓரியோ, அசத்தல் பேட்டரி... மோட்டோவின் புதிய மிட்ரேஞ்ச் மொபைல்கள்!

ஆண்ட்ராய்டு ஓரியோ, அசத்தல் பேட்டரி... மோட்டோவின் புதிய மிட்ரேஞ்ச் மொபைல்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை மொபைல் சந்தையில் கணிசமான அளவு இடத்தைக் கையில் வைத்திருந்தது மோட்டோரோலா. அதன் பின்னர் கூகுளிடம் இருந்து லெனோவோவுக்கு கை மாறிய பிறகு விற்பனையில் சறுக்க ஆரம்பித்தது. சீன நிறுவனங்களின் வருகையால் அதிகரித்த போட்டி, சரியான சமயங்களில் மொபைல்களை வெளியிடாதது போன்ற காரணங்களால் மோட்டோ மொபைல்களின் விற்பனை சரிய ஆரம்பித்தது. சற்று தாமதமாகவே அதைப் புரிந்துகொண்டாலும் சமீப காலமாக டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோரோலா. Moto G6, மற்றும் Moto G6 Play என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் மிட்ரேஞ்ச் சந்தையைக் குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் வருகையால் இந்த செக்மென்டில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த போட்டி காத்திருக்கிறது. 

மோட்டோ G6

மோட்டோ G6

இந்த ஸ்மார்ட்போனில் 5.7 Full HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. டூயல் கேமரா ஸ்மார்ட்போனான இதில் 12+5 MP என இரண்டு கேமராக்கள் பின்புறமும் 16 MP கேமரா முன்புறமும் இருக்கிறது. மொபைலின் டிஸ்ப்ளே மட்டுமல்ல, பின்புறமும் இதில் கிளாஸ்தான். எளிதில் கீறல்கள் விழாத கொரில்லா கிளாஸ் இதன் பின்புறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3000 mAh பேட்டரி ஒரு நாள் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்கும் என்கிறது மோட்டோரோலா. ஆக்டாகோர் Snapdragon 450 பிராஸசர் இது செயல்படத் தேவையான திறனை அளிக்கும். ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான ஓரியோ இயங்குதளம் இதில் இருக்கிறது.

மோட்டோ G6

முழுமையாக வாட்டர் ஃப்ரூப் இல்லாவிட்டாலும் கூட மிகக் குறைவான அளவு தண்ணீரில் இருந்து பாதிக்காத வகையில் கோட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. Dolby Audio இருப்பதால் ஆடியோ குவாலிட்டி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முந்தைய g சீரிஸ் மாடல்களை விடவும் இந்த மொபைலில் டிஸ்ப்ளே பெஸல்களின் அளவை நிறையவே குறைந்திருக்கிறது. பொதுவாக மோட்டோ மொபைல்களில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் முன்புறமாக கொடுக்கப்பட்டிருக்கும். சென்சாரின் அளவு பெரிதாக இருப்பதால் திரைக்குக் கீழே இடமும் சற்று அதிகமாகத் தேவைப்பட்டது.

மோட்டோ G6

ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் சென்சாரின் அளவைக் குறைந்திருக்கிறது மோட்டோ. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் குறைவான நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள முடியும் மேலும் Type-C போர்ட் இருக்கிறது. அமேசான் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

3GB+32GB வேரியன்ட் விலை: ரூ.13,999.

மோட்டோ G6 ப்ளே

மோட்டோ G6 ப்ளே


இந்த ஸ்மார்ட்போன் மொட்டோ G6 போலேவே தோற்றமளித்தாலும் இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன . 5.7 HD+ டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்புறமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் Qualcomm Snapdragon 430 SoC பிராஸசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 4,000 mAh பேட்டரியைக் கொண்ட இந்த மொபைலில் Type-C போர்ட் கிடையாது அதே நேரத்தில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. இந்த மொபைலில் ப்ளஸ் இதன் பேட்டரிதான்.

மோட்டோ G6 ப்ளே

பின்புறமாக 13MP கேமராவும் முன்புறமாக 8MP கேமராவும் இருக்கிறது. இது ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும் 

 2GB+16GB வேரியன்ட்: ரூ. 11,999 

இதே விலையில் கிடக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களின் வசதியோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இதில் வசதிகள் சற்று குறைவுதான். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே ஹைபிரிட் சிம் ஸ்லாட் கிடையாது. ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் மெமரி கார்டைப் பயன்படுத்த முடியும். Type-C போர்ட், டர்போ சார்ஜிங் போன்ற சில வசதிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் இருக்கின்றன. ஆனால், நீங்கள் மோட்டோ பிரியர் என்றால், இந்த ஸ்மார்ட்போன்களை தாரளமாக டிக் அடிக்கலாம். மற்றவர்கள் ரெட்மி, ரியல்மீ போன்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.