வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (07/06/2018)

கடைசி தொடர்பு:08:25 (07/06/2018)

SCOMADI... இந்தியாவுக்கு மீண்டு(ம்) வரும் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள்!

வழக்கமான கலர் ஆப்ஷன்களுடன், ஒருவர் தனது விருப்பத்துக்கு ஏற்றபடி SCOMADI ஸ்கூட்டரை வாங்கக்கூடிய வசதியும் இருக்கிறது. ஆனால் இதற்காக அவர் 3 மாதம் காத்திருக்க வேண்டும்!

பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த SCOMADI நிறுவனம், இந்திய ஸ்கூட்டர் சந்தையில் கால் பதிக்கும் முடிவில் இருக்கிறது. இந்த நிறுவனம் உலகளவில் விற்பனை செய்யக்கூடிய Turismo Leggera 50, TL125, TL200, Turismo Technica 125, TT200i ஆகியவை, லாம்ப்ரெட்டா GP சீரிஸ் ஸ்கூட்டரின் டிசைனைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் உற்பத்திக்காகச் சில காலம் சீனாவைச் சேர்ந்த Hanway மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருந்த SCOMADI, தற்போது தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக, தாய்லாந்தில் தனது ஸ்கூட்டர்களைத் தயாரித்துவருகிறது.

SCOMADI

இந்தியாவில் புனேவைச் சேர்ந்த AJ Performance என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறது SCOMADI. லக்ஸூரி மற்றும் பர்ஃபாமென்ஸ் கார்களுக்கான உதிரிபாகங்கள், பராமரிப்பு, மாடிஃபிகேஷன் பணிகளுக்குப் புகழ்பெற்ற இந்த நிறுவனம், மேற்கு இந்தியாவில் நற்பெயரைப் பெற்றிருக்கிறது. AJ Performance நிறுவனத்தை வழிநடத்திவரும் அலெக்ஸாண்டர் ஜான்சன், லக்ஸூரி கார்களை வைத்திருப்போரின் மத்தியில் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார்.

SCOMADI நிறுவனத்தின் பின்னணி இதுதான்!

TT 200

ஸ்கூட்டர் ஆர்வலர்களான  Frank Sanderson மற்றும் Paul Melici ஆகியோரால், 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் SCOMADI. `Scooter Manufacturing and Distribution’ என்பதே இதன் விரிவாக்கம். ஆரம்பத்தில் 10 மாதிரி (ProtoType) ஸ்கூட்டர்களை வடிவமைத்த இந்த நிறுவனம், அவற்றைக்கொண்டு 2009-ம் ஆண்டில் குறைந்த எண்ணிக்கையில் லிமிடெட் எடிஷன் மாடல்களைக் களமிறக்கியது. 

வழக்கமாக மெஷின்களால் அசெம்பிள் செய்யப்படும் ஸ்கூட்டர்கள் மத்தியில், முழுவதும் கைகளால் கட்டமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் தனித்துத் தெரிந்தன. இதனால் உற்சாகமடைந்த SCOMADI, 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, ஸ்கூட்டர் தயாரிப்பில் முழுவீச்சுடன் செயல்பட்டுவருகிறது. 1960-களில் விற்பனை செய்யப்பட்ட லாம்ப்ரெட்டா நிறுவனத்தின் GP 200 ஸ்கூட்டரின் டிசைனே, SCOMADI ஸ்கூட்டர்களின் தோற்றத்துக்கும் வெற்றிக்கும் அடிநாதமாக விளங்குகின்றன.

எந்த ஸ்கூட்டர்கள் இந்தியாவுக்கு வருகின்றன?

TT 125

முதற்கட்டமாக, TT125 எனும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது SCOMADI. ஏற்கெனவே அராய் அமைப்பால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்கூட்டரை, CBU முறையில் இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது AJ Performance நிறுவனம். இங்கே வழக்கமான கலர் ஆப்ஷன்களுடன், ஒருவர் தனது விருப்பத்துக்கு ஏற்றபடி ஸ்கூட்டரை வாங்கக்கூடிய வசதியும் இருக்கிறது. ஆனால், இதற்காக அவர் மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். Customization மற்றும் ஆக்ஸசரீஸ்களுக்குப் பெயர்பெற்ற SCOMADI, தனது ஸ்கூட்டர்களில் பலவிதமான கலர் - கிராஃபிக்ஸ், சீட், விண்ட் ஸ்க்ரீன், Luggage Rack, Protective Guard ஆகியவற்றை வழங்கும் என நம்பலாம்.

TT125 ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்?

TT 125 Side

15.5bhp பவரை வெளிப்படுத்தும் TT200 ஸ்கூட்டரின் மினி வெர்ஷன்தான் TT125. இதில் இத்தாலியில் தயாரிக்கப்பட்டு, தாய்லாந்துக்கு வரவழைக்கப்பட்ட ஏப்ரிலியாவின் 125சிசி,  4 ஸ்ட்ரோக் இன்ஜின் ஆகும். இது நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் SR125 ஸ்கூட்டரில் இருக்கும் இன்ஜின் அல்ல என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். Delphi நிறுவனத்தின் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் - CVT கியர்பாக்ஸ் அமைப்பைக்கொண்டுள்ள இந்த இன்ஜின், 7,300 ஆர்பிஎம்-ல் 11bhp பவரை வெளிப்படுத்துகிறது. 

TT 125 Top

இது இங்கே விற்பனைக்கு வரும்போது `இந்தியாவின் பவர்ஃபுல் மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டர்' என்ற பட்டத்தைப் பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. மேலும் என்டார்க், ஆக்ஸஸ், கிராஸியா ஆகிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது Fi சிஸ்டம் வேறு இருப்பதால், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கும் எனலாம். இதனுடன் SCOMADI ஆப்ஷனலாக வழங்கக்கூடிய ECU Remap மற்றும் பர்ஃபாமென்ஸ் எக்ஸாஸ்ட் சேரும்போது, 15bhp பவரை வெளிப்படுத்துகிறது TT125.

TT 125 Digital Meter

இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன், பார்க்க பழையதாகத் தெரிந்தாலும், தனித்தன்மையான டிசைனுடன் இருக்கிறது. ஆம், முன்பக்கத்தில் காயில் ஸ்பிரிங் உடன்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் - பின்பக்கத்தில் நான்குவிதமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர், சொகுசான ஓட்டுதலை வழங்கும்விதத்தில் செட் செய்யப்பட்டுள்ளன. இவை டெலிஸ்கோபிக் ஃபோர்க் அளவுக்கு இல்லாவிட்டாலும், Trailing Link அமைப்பைவிட சிறப்பாக இயங்கும் எனத் தெரிகிறது. பிரேக்ஸைப் பொறுத்தமட்டில், முன்பக்கம் 220மிமீ மற்றும் பின்பக்கம் 200மிமீ Nissin நிறுவனத்தின் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் கிடைப்பது ப்ளஸ்.

TT 125 Front Wheel

12 இன்ச் அலாய் வீல்களில், பைரலியின் Angel Scooter டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன (முன்: 110/70 - பின்: 120/70). TT125 ஸ்கூட்டர், Tubular Space Frame அமைப்பைக்கொண்டுள்ளது. இதன் பாடியில் Stainless Steel பயன்படுத்தப்பட்டிருந்தாலும், முன்பக்க மட்கார்டு மட்டும் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி 773 மிமீ சீட் உயரம் - 330 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் (ஐரோப்பிய விதிகளின்படி) - 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் - 100 கிலோ (Dry Weight) ஆகிய டெக்னிக்கல் விவரங்கள் ஆச்சர்யத்தை அளிக்கும்விதத்தில் இருக்கின்றன. 

ரெட்ரோ டிசைனைக்கொண்டுள்ள TT125, பிராக்டிக்கலான ஸ்கூட்டராகவும் இருக்கிறது. ஆம், சீட்டுக்கு அடியில் பெட்ரோல் டேங்க் இருப்பதால், ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பூட்டும் வசதியுடன்கூடிய ஸ்டோரேஜ் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எடை அதிகமுள்ள பொருள்களைச் சுமந்து செல்லும்விதமாக, ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் Luggage Carrier இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ரெட்ரோ தோற்றத்தில் இருந்தாலும், அதில் ஸ்பீடோமீட்டர் - டேக்கோமீட்டர் - ட்ரிப் மீட்டர் - ஃப்யூல் கேஜ் - வழக்கமான இண்டிகேட்டர்கள் ஆகியவை தெளிவாக இடம்பெற்றுள்ளன. க்ரோம் வேலைப்பாடுகளுடன்கூடிய LED ஹெட்லைட் - Conbtinuosu Glow பாணியிலான LED டெயில் லைட், இன்ஜின் கில் ஸ்விட்ச், Hazard லைட் என மாடர்ன் வசதிகளுடன் கவர்கிறது TT125. 

SCOMADI எதிர்காலம் எப்படி இருக்கும்?

TT 125 Rear Wheel

புனேவில் இருக்கும் Lulla நகரில், SCOMADI-யின் பிரத்யேகமான டீலர் மற்றும் சர்வீஸ் சென்டர் விரைவில் அமையவிருக்கின்றன. ஒருவேளை TT125 ஸ்கூட்டரை நீங்கள் புக் செய்ய விரும்பினால், புனேவில் இருக்கும் AJ Performance Outlet-க்குச் செல்ல வேண்டும். இந்த ஸ்கூட்டரின் புனே எக்ஸ் ஷோரூம் விலை 1.98 லட்சம் ரூபாயாக இருக்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன. இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு பைக்ஸ் போல ரெட்ரோ டிசைனில் செமயாக ஸ்கோர் செய்கிறது.

TT 200

வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் இல்லை என்ற பேச்சு நிலவினாலும், SCOMADI தயாரிப்புகளில் அந்தப் பிரச்னை இல்லை. முதற்கட்டமாக ஆறு கலர்களில் TT125 ஸ்கூட்டர் களமிறங்கும்; டெலிவரிகள் சில மாதங்களில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டருக்குக் கிடைக்கும் ரெஸ்பான்ஸைப் பொறுத்து, கூடுதல் திறன்மிக்க TT200 ஸ்கூட்டரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முடிவில் இருக்கிறது SCOMADI. 

TT 125 Luggage Carrier

இந்திய டூ-வீலர் சந்தை, தற்போது ஸ்கூட்டர் மயமாகிக்கொண்டிருக்கிறது. எனவே, SCOMADI நிறுவனத்தின் சந்தைமதிப்பு, இந்தியாவில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் விலையை வைத்துப் பார்க்கும்போது, விற்பனை எண்ணிக்கை அதிரடியாக இருக்காது எனலாம். என்றாலும், தனது வகையிலே அட்டகாசமான தரம் - சூப்பர் பர்ஃபாமென்ஸ் - ரெட்ரோ டிசைன் - அதிக சிறப்பம்சங்கள் எனப் பல ப்ளஸ்களைத் தன்வசம்கொண்டிருக்கும் TT125, இந்தியாவில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பது, போகப்போகத்தான் தெரியும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்