Published:Updated:

இலங்கை கடற்படை சுட்டதில் காரைக்கால் மீனவர் மீது குண்டு பாய்ந்தது!

இலங்கை கடற்படை சுட்டதில் காரைக்கால் மீனவர் மீது குண்டு பாய்ந்தது!
இலங்கை கடற்படை சுட்டதில் காரைக்கால் மீனவர் மீது குண்டு பாய்ந்தது!
இலங்கை கடற்படை சுட்டதில் காரைக்கால் மீனவர் மீது குண்டு பாய்ந்தது!

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் உடலில் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.

காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 13 பேர் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்றிரவு நாகை மாவட்டம் கோடிக்கரையி்ல் அவர்கள் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

##~~##
இதில், கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர் செண்பகம் உடலில் குண்டு பாய்ந்தது.மேலும், படகுகளில் இருந்த மீனவர்களின் பொருட்களையும் கடலில் வீசி இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.
அங்கிருந்து உயிர் தப்பிய மீனவர்கள், பலத்த காயம் அடைந்த மீனவர் செண்பகத்தை வேதாரண்யம் அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் 16 பேர் சிறையி்ல் உள்ள நிலையி்ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.