Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

`மென்மையான, பயந்த பெண்ணான என்னை, வலிமையானவளாக மாற்றியவள் `பாகுபலி' அவந்திகா. குதிரையேற்றம், வாள் வீச்சு என எல்லா வற்றையும் கொடுத்து என்னைத் தைரியமான பெண்ணாக மாற்றியவளை விட்டுப் பிரியப்போகிறேன்' என ஃபீலாகியிருக்கிறார் தமன்னா. `பாகுபலி'யில் தமன்னாவின் ஷூட்டிங் நாட்கள் விரைவில் முடிவடையப்போவதுதான் அவரின் சோகத்துக்குக் காரணம். மிஸ் யூ பேபி!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கான்களின் நட்புதான் இப்போது பாலிவுட்டின் வைரல். `குடும்பத்தினருடன் `தங்கல்' படம் பார்த்தேன். `சுல்தான்' படத்தைவிட மிகச்சிறந்த படம். பெர்சனலாக உன்னைப் பிடிக்கும் அமீர். ஆனால், தொழில்ரீதியாக வெறுக்கிறேன்' என சல்மான் கான் ட்விட்டரில் எழுத, பதிலுக்கு `சல்லு, உன் வெறுப்பிலும் ஓர் அன்பையே உணர்கிறேன்' என ரிப்ளை தட்டி லைக்ஸ் அள்ளியிருக்கிறார் அமீர்கான். நண்பேன்டா!

செரீனா வில்லியம்ஸுக்குத் திருமணம். ரெட்டிட் சமூக வலைதளத்தின் நிறுவனரான அலெக்ஸிஸ் ஒஹானியெனை மணக்க இருக்கிறார் செரீனா. 35 வயதான செரீனாவைவிட, மூன்று வயது இளையவர் அலெக்ஸிஸ். `இன்று வீட்டுக்குக் கொஞ்சம் தாமதமாக வந்தேன். என் பைகள் பேக் செய்யப்பட்டிருந்தன. எனக்கான விமானம் தயாராக இருந்தது. சேரும் இடம் ரோம். அழைத்துச்செல்பவர் என் அழகன். ஆமாம், ரோமில்தான் எங்கள் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டன. நாங்கள் சந்தித்துக்கொண்ட அதே இடத்தில் இப்போது...' என கவிதையாக எழுதி நிச்சயதார்த்தத்தை உறுதி செய்திருக்கிறார் செரீனா. லவ் ஆல்!

இன்பாக்ஸ்

ஜெர்மனி டு சீனாவுக்கு ரயில் பறக்கப்போகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது ஜெர்மனி. `ஜெர்மனியில் தயாராகும் பொருட்களை  கடல் வழியாக சீனாவுக்குக் கொண்டுவர, 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விமானம் மூலம் என்றால் செலவு அதிகம். அதனால் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டுபோக, `சில்க் ரோட்' வழியாக இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்' என அறிவித்திருக்கிறது ஜெர்மன் ரயில்வே. போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான், மங்கோலியா எனப் பலநாடுகளைக் கடக்கப்போகிறது இந்த ரயில். மொத்தம் 12,000 கிலோமீட்டர் தூரம். இந்தியாவுக்கும் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism