குறைந்த காலத்திலேயே 8 மில்லியன் கார்களை விற்பனை செய்த ஹூண்டாய்

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் வெளிவந்து 19 வருடம் 6 மாதம் ஆகிறது. இந்தக் குறைந்த காலத்திலேயே 80 லட்சம் கார்களை விற்பனைசெய்த பெருமை ஹூண்டாய் நிறுவனத்துக்கு வந்துவிட்டது. தனது 80 லட்சமாவது காராக 2018 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை விற்பனை செய்துள்ளார்கள். 

ஹூண்டாய் இந்தியா

இதுவரை ஹூண்டாய் மொத்தம் 53,00,967 கார்களை இந்தியாவிலும் 27,03,581 கார்களை உலகளவிலும் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டுமே 5,36,241 கார்களை விற்பனை செய்துள்ளது. க்ரெட்டா, 126 bhp பவர் மற்றும் 26.5 kgm டார்க்கை அதிகபட்சமாக வெளிப்படுத்தக்கூடியது எஸ்யூவி. இந்தக் காரில் எக்கச்சக்க சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதற்கு விலை ஒரு பாதகமான விஷயம். ஆனாலும், மக்களுக்கு இந்தக் கார் பிடித்துப்போக ஒவ்வொரு மாதமும் டாப் 10 கார் விற்பனை பட்டியலில் இடம் பெறுகிறது. க்ரெட்டாவின் வெற்றியைத் தொடர்ந்து இக்காரை அடிப்படையாக வைத்து சப் 4 மீட்டர் கார் ஒன்றை உருவாக்கிவருகிறது. 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைவு என்பதால் காரின் விலையும் குறையவுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!