ஆக்டோபஸ் பழசு... அக்கிலெஸ் புதுசு... உலகக் கோப்பையைக் கணிக்கும் அதிசயப் பூனை! #WorldCup | football world cup predictor achilles cat

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (14/06/2018)

கடைசி தொடர்பு:19:41 (14/06/2018)

ஆக்டோபஸ் பழசு... அக்கிலெஸ் புதுசு... உலகக் கோப்பையைக் கணிக்கும் அதிசயப் பூனை! #WorldCup

இன்று இரவு அக்கிலெஸ் சொன்னபடி ரஷ்ய அணி வெற்றிபெற்றால், நாளை உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களின் கவனம் அக்லீஸ் பக்கம்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் அக்லீஸ்

ஆக்டோபஸ் பழசு... அக்கிலெஸ் புதுசு... உலகக் கோப்பையைக் கணிக்கும் அதிசயப் பூனை! #WorldCup

லகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன. ரசிகர்களிடையே `ஃபிஃபா' ஃபீவர் பரவத் தொடங்கிவிட்டது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது கூகுள் டூடுலில் இடம்பிடித்தது ஒரு கால்பந்து செலிப்ரிட்டியின் புகைப்படம். அந்த செலிப்ரிட்டிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. ஆனால், அந்த செலிப்ரிட்டி மனிதனல்ல. 2010-ம் ஆண்டு கால்பந்து வெற்றியாளர்களைக் கணித்த `பால்' ஆக்டோபஸ்தான் அந்த செலிஃப்ரட்டி!

2014-ம் ஆண்டு அது இறந்ததும் அதற்கு ஜெர்மனியில் நினைவிடமெல்லாம் அமைக்கப்பட்டது. கால்பந்து போட்டிகளுக்கான கணிப்புகளில் எப்போதுமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது. 2010 கால்பந்து உலகக்கோப்பையில் நடைபெற்ற 14 போட்டிகளில் 12 போட்டிகளை மிகச் சரியாகக் கணித்து உலகளவில் பிரபலமடைந்தது பால் ஆக்டோபஸ். அதேபோல 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளைக் கணிக்கவுள்ளது `அக்கிலெஸ்' (Achilles) என்கிற பூனை.

பால் அக்டோபஸ்

வெள்ளை நிற முடிகள், நீல நீறக் கண்கள் என மிக அழகாக இருக்கும் அக்கிலெஸுக்கு, காது கேட்காது! செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள ஹெர்மிட்டேஜ் மியூசியத்தில், தன் டீம்மில் உள்ள மற்ற பூனைகளுடன் சேர்ந்து எலிகளை துவம்சம் செய்யும் வேலையைச் செய்துகொண்டிருந்தது அக்கிலெஸ். தற்போது உலகக் கோப்பைக்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள `கேட்ஸ் ரீபப்ளிக் கஃபே'க்கு எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை முடியும் வரை இங்குதான் அக்கிலெஸ் இருக்கும். பார்வையாளர்கள் அக்கிலெஸைப் பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனராம். 

``அக்கிலெஸைத் தேர்வு செய்ததற்குக் காரணம், `அவன் அழகாக இருப்பான். அவனுக்குக் காது கேட்காதே தவிர உள்ளுணர்வு மிக மிக அதிகம். அவன் இதயத்திலிருந்து எதையும் பார்ப்பான்" என்கிறார் அக்கிலெஸின் மருத்துவர் அன்னா கொண்ட்ரடியேவா (Anna Kondratyeva)

அக்லீஸ் பூனை

2010-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையின்போது, அனைத்து விளையாட்டுச் செய்திகளின் தலைப்புச் செய்தியாக விளங்கியது பால் ஆக்டோபஸ்தான். கால்பந்து பார்க்காதவர்கள்கூட பாலின் கணிப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம்காட்டினர். பால் சொன்னது நடந்ததா என்று மறுநாள் சரிபார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. அதே சுவாரஸ்யத்தை இந்த ஆண்டு உலகக்கோப்பையிலும் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அக்கிலெஸைக் களமிறக்கியுள்ளனர்.

``பால் ஆக்டோபஸுக்கு முன், விளையாடப்போகும் இரண்டு நாடுகளின் கொடிகளைக்கொண்ட இரண்டு உணவுப்பெட்டிகள் வைக்கப்படும். அவற்றில் பால் எதைத் திறந்து உணவு அருந்துகிறதோ அந்த நாடு வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. அதை பலமுறை நிரூபித்தும்காட்டியது பால். அதேபோல் அக்கிலெஸ் பூனையின் முன்பு இரண்டு நாடுகளின் கொடிகளைக்கொண்ட இரண்டு உணவுக்கிண்ணங்கள் வைக்கப்படும். அவற்றில் எதை அவன் சாப்பிடுகிறானோ அந்த நாடுதான் வெற்றிபெறும்'' என்கின்றனர் அக்கிலெஸின் பாதுகாப்பாளர்கள்.

fifa worldcup predictor achilles cat

2017-ம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பையில் நடந்த போட்டிகளின் வெற்றியாளர்களை, அக்கிலெஸ் மிகச் சரியாகத் தேர்வுசெய்துள்ளது. அதில் ஒரு போட்டி டிராவில் முடியும் என்பதைக்கூட சரியாகக் கண்டுபிடித்துள்ளது என்பதும் அக்கிலெஸின் ரெக்கார்டு.

பால் ஆக்டோபஸுக்குப் பிறகு, சில விலங்குகள் உலகக்கோப்பை கணிப்பில் ஈடுபட்டன. ஆனால், அவை அனைத்தும் ஓரிரு போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளைத் தவறாகவே கணித்தன. பால்தான் இன்று வரை எட்டு ஆண்டுகளாக உலகக்கோப்பை வெற்றிகளைக் கணித்ததில் `சூப்பர் ஸ்டார்'. அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பால் இடமிருந்து தட்டிப்பறிக்குமா அக்கிலெஸ் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இன்று ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக்கு அந்த உற்சாகம் குறையப்போவதில்லை. கடைசி நொடிவரை மேட்ச் பார்ப்பவர்களுக்கு, அக்கிலெஸ் கணித்த அணி ஜெயிக்குமா என்ற எதிர்பார்ப்பு, மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். சவுதி அரேபியா-ரஷ்யா அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி வெற்றிபெறும் என்று கணித்துள்ளது அக்கிலெஸ்.

இன்று இரவு அக்கிலெஸ் சொன்னபடி ரஷ்ய அணி வெற்றிபெற்றால், நாளை உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களின் கவனம் அக்கிலெஸ் பக்கம்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்த்துகள் அக்கிலெஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்