வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (15/06/2018)

கடைசி தொடர்பு:14:37 (15/06/2018)

வாவ்! பட்ஜெட் விலையில் ஹார்லி டேவிட்ஸன்... ஆனா, ஒரு கண்டிஷன்! #HarleyDavidson

பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான்? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம்.  பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான்? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம்.  இந்த பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான்? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். 

வாவ்! பட்ஜெட் விலையில் ஹார்லி டேவிட்ஸன்... ஆனா, ஒரு கண்டிஷன்! #HarleyDavidson

‘என்னிக்காச்சும் ஒரு நாள் ஹார்லி (HarleyDavidson) பைக்ல போகணும். அதான் ஆசை’ என்பவர்களின் லிஸ்ட் இங்கே பெருசு. ‘நாமே சமைத்த சமையல் நமக்கு ருசிக்காது’ என்பதுபோல், அமெரிக்காவில் வேண்டுமானால் விற்பனை மந்தமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஹார்லியின் லெவல் வேற! ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்ட எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால் காசு இருக்காது. காரணம், இந்த பைக்கின் ஆரம்ப விலையே 6 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான்? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். 

HarleyDavidson

'ஒருவேளை, மலிவு விலையில் மானியம் எதுவும் தருகிறார்களோ' என்று  ஓட்டுப் போடும் குடிமகன் மாதிரி நினைத்து விடாதீர்கள்! யூஸ்டு ஹார்லி டேவிட்சன் பைக்குகளை தன் ஷோரூம்களிலேயே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது அந்த நிறுவனம். அதாவது, பழைய ஹார்லி பைக்குகள்.

இந்தியா முழுக்க மொத்தம் 27 ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப்கள் உள்ளன. அதை இந்த ஆண்டு இறுதிக்குள் 30 டீலர்ஷிப் ஆக்கவிருக்கிறதாம். சென்னையிலும் அதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கத்தில் ‘மெரினா ஹார்லி டேவிட்சன்’ எனும் பெயரில் புது ஷோரூம் வந்துவிட்டது. ``இதற்காகவே புதிதாக சில டீலர்ஷிப்களைத் தொடங்க இருக்கிறோம். இந்தியா முழுக்க இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் காதல் எனக்கு வியப்பை அளிக்கிறது. இந்த ஐடியா எங்களுக்கு புது வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தர உதவும். புதிய பைக் வாங்க பணம் இல்லாதவர்கள், இதன் மூலம் குறைந்த விலைக்கு ஹார்லி பைக்குகளை ஓட்டலாம்’’ என்றார் ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கன்ஸி.

HarleyDavidson

வியாபாரத்தில் ‘அப்பாரல் செக்மென்டேஷன்’ என்று ஒரு அம்சம் உண்டு. அதாவது, ஒரு பொருளை எடுத்தவுடன் நேரடியாக ஷோரூமுக்கு வந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவு. அதற்கான விளம்பரம்தான் அப்பாரல் செக்மென்டேஷன். அதாவது, மால்களில்... சூப்பர் மார்க்கெட்களில்... தியேட்டர்களில் என்று தங்கள் விற்பனைப் பொருளைக் காட்சிக்கு வைத்து விளம்பரப்படுத்தி, தங்கள் ஷோரூமுக்கு வர வைக்கும் முயற்சியையும் ஹார்லி எடுக்க இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்களில் எஸ்கேப் அவென்யூவிலோ, சத்யம் காம்ப்ளக்ஸிலோ பழைய ஹார்லி பைக்குகளின் விற்பனையை அநேகமாகப் பார்க்கலாம். முதலில் சீனா மற்றும் இந்தியாவில் இதற்கென அப்பாரல் ஸ்டோர்களை நிறுவ இருக்கிறது ஹார்லி.

ஹார்லி டேவிட்சனின் வெற்றியே அதன் சர்வீஸில்தான் இருக்கிறது. ஹார்லி வாடிக்கையாளர் ஒருவர்கூட நடுரோட்டில் நின்று புலம்பியதாக வரலாறு கிடையாது என்றே சொல்லலாம். இந்தியாவில் எந்த இடத்தில் பிரேக்டவுன் ஆனாலும்... குறப்பிட்ட சில நிமிடங்களில் உங்கள் இடத்துக்கு ஒரு ஸ்பேர் பைக்கோ, மெக்கானிக்கோ வந்து உங்கள் பிரச்னையைச் சரிசெய்வதில்தான் ஹார்லியின் பலம் இருக்கிறது. சர்வீஸ் நெட்வொர்க் ஓகே! பராமரிப்பு விலை, பழைய பைக்குகளில் பராமரிப்பு மற்றும் ஸ்பேர்களின் விலை குறைக்கப்பட்டால்தான் இந்த வெற்றி சாத்தியமாகும். ஏனென்றால், ஒரு ஹார்லி பைக்கின் மட்கார்டுக்கு மட்டும் 30,000 வரை எடுத்து வைக்க வேண்டும் என்பதைக் குறித்துக்கொள்க!

HarleyDavidson

ஹார்லி டேவிட்சனில் ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ்டர், சாஃப்ட்டெயில், டூரிங், CVO என்று வெரைட்டியான ஆப்ஷன்களில் பைக்குகள் உள்ளன. இதில் ஸ்ட்ரீட் 750 எனும் பைக்தான் குறைந்த விலை பைக். புது பைக்கின் விலை 6.00 லட்சம். அடுத்ததாக, ஸ்ட்ரீட் ராடு எனும் பைக்கின் விலை 7.50 லட்சம். இவை இரண்டும் இப்போது பழைய மார்க்கெட்டில் கிடைத்தால்... கிட்டத்தட்ட 3 முதல் 4 லட்சத்துக்கு வரலாம். அப்படியென்றால்  யமஹா R3, பெனெல்லி போன்ற பைக்குகள் வாங்கும் விலையில் ஒரு பழைய ஹார்லி  பைக் வாங்கிவிடலாம்.

ஆனால், டூரிங் பைக்குகள்தான் ஹார்லியில் அதிக விலை கொண்ட பைக்குகள். ரோடு கிங், ஸ்ட்ரீட் கிளைடு, ரோடு கிளைடு போன்றவை 28 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை. இவை பழைய மார்க்கெட்டில் வரும்போது என்ன விலை இருக்கலாம்? கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் துண்டு விழும்போல் தெரியுதே! இதுக்கும் எதுனா வழி பண்ணுங்க ஹார்லி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்