Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

செம கொண்டாட்டத்தில் இருக்கிறது தெலுங்கு சினிமா. பாலகிருஷ்ணாவின் 100-வது படம் `கெளதம புத்ர சட்டகர்னி', ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிரஞ்சீவியின் 150-வது படம் `கைதி நம்பர் 150' என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்புகின்றன. `கத்தி' ரீமேக்கான `கைதி எண் 150' படத்தில் 61 வயதான சிரஞ்சீவி செம ஸ்மார்ட் லுக், துள்ளல் டான்ஸுமாக மிரட்ட, இன்னொரு பக்கம் சட்டகர்னியாக பாலையா கிராஃபிக்ஸில் தெறிக்கவிட, ரசிகர்கள் டபுள் ஹேப்பி. பாய்ஸ் ஆர் பேக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். `ரோஜா' படம் வெளிவந்த புதிதில் மோகன்லால், மதுபாலா நடித்த `யோதா' என்ற படத்துக்கு இசையமைத்த
ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது இரண்டாவது முறையாக மோகன்லாலுடன் இணைகிறார். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய `ரெண்டாம் ஊழம்' வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், பாஞ்சாலியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க, மலையாளத்தின் மெகா பட்ஜெட் படமாக உருவெடுக்க இருக்கிறது `ரெண்டாம் ஊழம்'. சேட்டன்ஸ் சேஞ்சிங்!

இன்பாக்ஸ்

அடுத்த அதிரடிக்கு அமீர்கான் ரெடி. `தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படத்தில் `பிக் பி' அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார் அமீர். `தூம் 3'  இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம்,  `கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின்போது கொள்ளைக்காரர்களாக, கொலைகாரர்களாக அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிய கதை. கொள்ளைக் காரராக அமீர்கான் நடிக்க, கூட்டத்துக்குத் தலைவனாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். பாலிவுட் அதிரப்போகுது!

இன்பாக்ஸ்

இந்த ஆண்டு ஆஸ்கரில் பல விருதுகளை அள்ளப்போகும் படமாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது `லா லா லேண்ட்'. காதலும் காதல் நிமித்தமுமான இந்தப் படத்தில், ரயான் கோஸ்லிங், எம்மா ஸ்டோனின் ரொமான்ஸ் செம!  சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, பாடல் என, ஏழு கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறது. அடுத்தது ஆஸ்கர்தான் என உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.
விருது விருது... வருது வருது!