ஓர் ஊரின் கலாசாரம், பெருமை, அங்கே உள்ள மக்களின் உணர்வுகள்... இவை எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதற்காக, இந்த வருடம் முழுக்க `இயர் ஆஃப் டிராவல்' பிளான் போட்டு, அமெரிக்காவைச் சுற்றிவர இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். அதன் தொடக்கமாக டெக்ஸாஸ் சென்ற மார்க், அங்கு ரோடோ விளையாட்டைப் பார்த்து ரசித்து ஸ்டேட்டஸும் தட்டியிருக்கிறார். ரோடோ என்பது அமெரிக்காவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்ற ஒரு விளையாட்டு. அலங்காநல்லூருக்கு வாங்க மார்க்!

அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே நம் ஊர் அரசியல் பாணியில் அதிரடித்தார் ட்ரம்ப். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கனவுத் திட்டமான `மருத்துவக் காப்பீடு' திட்டத்தை ரத்துசெய்தார். இதைவிடவும் சிறப்பான இன்ஷுரன்ஸ் திட்டம் என்னிடம் இருக் கிறது. அதை விரைவில் அறிவிப்பேன்' எனச் சொல்லியிருக்கிறார். அதிபர் பதவி முடிந்து வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய ஒபாமா தனது கடைசி உரையில், `மக்கள் உழைப்பையே எப்போதும் முதலீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பு இல்லாமல் எதுவுமே நடக்காது. இங்கு தனி நபரால் எந்த மாற்றமும் வந்துவிடாது. `நாம்’ என்னும் ஒற்றுமையே எல்லாவற் றையும் சமாளிக்க, சாதிக்க உதவும்' எனப் பேசியிருக்கிறார். பை பை ஒபாமா!

`பிரேமம்’, `கொடி’ படங்களின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் இப்போது ஸ்மைலிகளாகப் பூத்துச் சிலிர்க்கிறார். தெலுங்கில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பதுதான் மகிழ்ச்சிக்குக் காரணம். `ஆர்யா’, `ஆர்யா-2’ உள்பட பல ஹிட்களைக் கொடுத்த சுகுமார் இயக்கத்தில், அனுபமா கிராமத்துக் கிளியாக நடிக்க இருக்கிறார். அழகுலு!

`அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன்...' என வீரேந்திர ஷேவாக் தமிழில் எழுதிய ஒரு வரி ட்வீட், அவரது வாழ்நாளின் அதிகபட்ச மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. `கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ட்விட்டரில் இயங்குவதுதான் என் மிகப்பெரிய பணி. ஒலிம்பிக்கின்போது நான் எழுதிய ட்வீட்கள், பல ஆயிரம் லைக்ஸ் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டன. ஆனால், தமிழில் எழுதிய இந்த ட்வீட்தான், 50 ஆயிரத்துக்கும் மேல் லைக்ஸ் மற்றும் ரீட்வீட்ஸ் அள்ளியிருக்கிறது. தமிழர்களுக்கு நன்றி. உங்கள் போராட்டம் வென்றுவிட்டது' என ஃபீலாகியிருக்கிறார் ஷேவாக். லைக்ஸ்... லைக்ஸ்!

தெலுங்குத் தேசத்தின் மோஸ்ட் வான்டட் பேச்சுலர் `பாகுபலி’ பிரபாஸ். `எப்ப கல்யாணம்... எப்ப கல்யாணம்?’ எனத் துளைக்கும் மீடியாவைப் புன்னகைகளால் சமாளித்துக் கடக்கிறார். பிரபாஸ் சரியாகப் பதில் சொல்ல மாட்டார் என மீடியா, அவரது பெரியப்பாவும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணம் ராஜுவிடம் இதே கேள்வியைக் கேட்க அவர், ` ‘பாகுபலி - 2’ ரிலீஸுக்குப் பிறகு, அம்மா காட்டும் பெண்ணுக்குத் தாலி கட்டுவார்’ எனச் சொல்லியிருக்கிறார். 38 வயதினிலே!

`நான் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறேன். குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதற்கும் எனக்கு ஆண் துணை தேவை இல்லை. குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை எனக்கு யாரும் என் வயதை நினைவுப்படுத்திக் ்கொண்டிருக்க வேண்டாம்’ என அதிரடிப் பேட்டி தட்டியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. கெத்து கேர்ள்!