Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• `ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ளப்போவது இல்லை' என அறிவித்திருக்கிறார் பிரபல ஈரானிய நடிகை தாரனே அலிதூஸ்தி. `ஈரான் நாட்டு மக்களுக்கு, விசா கொடுப்பது இல்லை' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முடிவை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான இறுதிப் பட்டியலில் நாமினேட் ஆகியுள்ளது ஈரான் திரைப்படமான `தி சேல்ஸ்மேன்'. அஸ்கார் ஃபர்காதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அலிதூஸ்தி. அவருடைய இந்த அறிவிப்புக்கு, ஈரானில் மட்டும் அல்ல... ஹாலிவுட்டிலும் அமோக ஆதரவு. நிமிர்ந்து நில்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• `சென்னை 28 பார்ட்-3’ எடுக்கும் வெறியில் இருக்கிறது வெங்கட் பிரபு டீம். மூன்றாவது பார்ட்டில், நிச்சயம் ஒரு கிரிக்கெட் வீரர் நடிப்பார். அவர் வேறு  யாரும் அல்ல, ரவிச்சந்திரன் அஷ்வின்தான் என உற்சாகத்தில் இருக்கிறது அந்த டீம். அஷ்வினும் சினிமா டயலாக்குகளை மனப்பாடம் செய்து, டப்ஸ்மாஷ்களில் லைக்ஸ் அள்ளிவருகிறார். அஷ்வின் ராக்ஸ்!

 

• தமிழ்நாட்டுக்கு `ஜல்லிக்கட்டு' போல, கர்நாடகாவுக்கு `கம்பலா' என்ற எருமைப்பந்தயம். கடலோரக் கிராமங்களில் நடக்கும் இந்த விளையாட்டுக்கு, மிகப் பழைமையான வரலாறு உண்டு. ஆனால்  விலங்குகள் நல அமைப்புகள், ஜல்லிக்கட்டைப் போலவே அந்தப் போட்டிக்கும் தடை வாங்கின. ஆனாலும் தடைகளை மீறி கம்பலாவை நடத்தியுள்ளனர் கன்னடத் தேசத்து விவசாயிகள். கூடவே ஹூப்ளியிலும் கம்பலா தடையை நீக்கக் கோரி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டுப் போராட்டத்தைப் பார்த்து, அதே மாதிரியான பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ரெடியாகிவிட்டது கர்நாடகா. கும்பலா போராடுங்க!

இன்பாக்ஸ்

• கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக 62 கிலோ எடையிலேயே இருக்கிறார் ராகுல் காந்தி. இந்த ஃபிட்னஸுக்குக் காரணம், ராகுல் காந்தியின் வொர்க்அவுட் மோகம். ஜிம், ஃபிட்னஸ் சென்டர், ஸ்விம்மிங் என்றெல்லாம் இல்லை. எப்போது நேரம் கிடைத்தாலும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி என்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார் ராகுல். நள்ளிரவு நேரம் என்றால்கூட, ஒரு மணி நேரம் வாக்கிங், ஜாகிங்கை மிஸ்பண்ணாமல் பார்த்துக்கொள்கிறார் ராகுல். நட ராசா!

• ஹ்ருத்திக் ரோஷன் நடித்த `காபில்' படம் வெளியான அதே நாளில்தான் ஷாரூக் கானின் `ராயீஸ்' படமும் வெளியானது. ஷாரூக் கான், தன்னுடைய பாலிவுட் பலத்தால் அதிக தியேட்டர்களைப் பிடித்துவைத்துக்கொள்ள, `காபிலு'க்குப் போதிய அளவில் தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்துவிட்டார் ஹ்ருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷன். `சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், எனக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம். பாலிவுட், அறமற்ற அசுத்தமான இடமாக மாறிவிட்டது. இங்கே நட்புக்கு இடம் இல்லை. இன்று திரைக்கு முன்னால் கைகுலுக்கிவிட்டு, முதுகில் குத்துகிறார்கள்' என்று கடுப்பு ஸ்டேட்டஸ் போட, `டோன்ட்வொரி பப்பா' என அப்பாவுக்கு ஆறுதலாக கமென்ட் போட்டிருக்கிறார் ஹ்ருத்திக். பாசக்கார ஃபேமிலி!

இன்பாக்ஸ்

• தான் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். பெங்களூரு பல்கலைக்கழகம் அளித்த கௌரவ டாக்டர் பட்டத்தை `வேண்டாம்' என வாங்க மறுத்துவிட்டார். கூடவே `நான் விளையாட்டுத் துறை குறித்து ஆய்வு நடத்திய பிறகு, டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்கிறேன்' என்றும் கூறி, அடுத்தடுத்து அபார சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆல்வேஸ் அசத்தல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism