பிஎம்டபிள்யூ G310GS, கேடிஎம் 390... அட்வென்ச்சர் பைக்ஸ் விரைவில்!

4 லட்ச ரூபாய்க்கு (உத்தேசமாக) வெளிவர உள்ள பிஎம்டபிள்யூ G310GS பைக்கின் டெலிவரி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

 

அட்வென்ச்சர் பைக் ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி! உங்களின் நீண்ட காலக் காத்திருப்புக்குப் பதிலாக, அடுத்த ஆண்டில் 390 அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது கேடிஎம். அதேபோல, கடந்த 8-ம் தேதியன்று, தனது G310GS அட்வென்ச்சர் பைக்கின் புக்கிங்கை (50,000 ரூபாய்  - முன்பதிவுத் தொகை) பிஎம்டபிள்யூ தனது டீலர்களில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கிவிட்டது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் X-300 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, இந்த இரு அட்வென்ச்சர் பைக்ஸ் களமிறக்க உள்ளன. 

 

கேடிஎம் 390 அட்வென்ச்சர்

 

அட்வென்ச்சர் பைக்ஸ்

 

2013-ல் டியூக் 390 இந்தியாவில் அறிமுகமானபோதே, 390 அட்வென்ச்சர் குறித்த பேச்சுகள் எழுந்தன. 2001 முதலாக டக்கார் ராலியில் கேடிஎம் வெற்றிபெற்றுவதே இதற்குக் காரணம்.  2016 முதலாக டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கின் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 19 இன்ச் முன்பக்க மற்றும் 17 இன்ச் பின்பக்க ஆஃப்ரோடு டயர்கள்-  உயரமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விண்ட் ஸ்க்ரீன் - எக்ஸாஸ்ட் பைப் - முன்பக்க ஃபெண்டர் - இன்ஜின் Skid ப்ளேட் - அதிக Travel உடன் கூடிய சஸ்பென்ஷன் செட்-அப் - ஸ்போக் வீல்கள் - அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் - குறைவான பாடி பேனல்கள் என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் இருக்கும் என நம்பலாம். 

 

அட்வென்ச்சர் பைக்ஸ்


1290 சூப்பர் அட்வென்ச்சர் பைக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில், டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்பட உள்ளது; என்றாலும், ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் வேகத்துக்கு ஏற்ற டியூனிங் - அதற்கேற்ற கியர் ரேஷியோ - ஆக்ஸிலரேஷனுக்கு உதவும் பெரிய செயின் ஸ்ப்ராக்கெட் எனக் கணிசமான வித்தியாசங்கள் இருக்கும் எனத் தெரிகிறது; அதேபோல டியூக் 390 பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம்தான் அட்வென்ச்சர் பைக்கிலும் இருக்கும் என்றாலும், பின்பக்கத்தில் தடிமனான பாக்ஸ் ஃப்ரேம் ஸ்விங் ஆர்ம் இடம்பெற்றுள்ளது. 

 

அட்வென்ச்சர் பைக்ஸ்


டியூக் 390 போலவே, 390 அட்வென்ச்சர் பைக்கிலும் LED ஹெட்லைட், TFT டிஸ்பிளே உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரைடு-பை-வயர் மற்றும் ஏபிஎஸ் இருக்கும் எனலாம்; இதில் கார்னரிங் ஏபிஎஸ் உடன் கூடுதலாக தேவைபட்டால் ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்துகொள்ளக்கூடிய வசதி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ரைடிங் மோடுகள் ஆகியவை இருக்கலாம். அக்டோபர் மாதத்தில் நடைபெறும் InterMot அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் EICMA ஆகிய மோட்டார் எக்ஸ்போகளில், இந்த பைக் காட்சிபடுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! எனவே விலை குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை; டியூக் 390 பைக்கைவிட 50 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம்.

 

பிஎம்டபிள்யூ G310GS

 

அட்வென்ச்சர் பைக்ஸ்

 

4 லட்ச ரூபாய்க்கு (உத்தேசமாக) வெளிவர உள்ள பிஎம்டபிள்யூ G310GS பைக்கின் டெலிவரி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வந்துள்ளன. பறவையின் அலகு போன்ற முன்பக்க மட்கார்டு, ரேடியேட்டர் கார்டு, உயரமான ஹெட்லைட் வைஸர், 40மிமீ கூடுதல் டிராவலுடன் கூடிய முன்பக்க USD ஃபோர்க், கட்டுமஸ்தான பெட்ரோல் டேங்க், 19 இன்ச் முன்பக்க வீல் என G310R பைக்கைவிடத் தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கிறது G310GS. 

 

அட்வென்ச்சர் பைக்ஸ்


இந்த பைக்கில், G310R மற்றும் அப்பாச்சி RR310 பைக்கில் இருக்கும் அதே 313சிசி - லிக்விட் கூல்டு - 4 வால்வ் - DOHC - சிங்கிள் சிலிண்டர் Reverse Inclined இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புதான் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது; G310R பைக்கைவிட 11 கிலோ எடை அதிகமாக இருந்தாலும், G310R மற்றும் G310GS (Baby-GS) பைக்கின் டாப் ஸ்பீடும்  143கிமீதான் என்கிறது பிஎம்டபிள்யூ.  

 

Adventure Bikes


180மிமீ டிராவலுடன் கூடிய 41மிமீ USD ஃபோர்க்கை அட்ஜஸ்ட் செய்யமுடியாது என்றாலும், பின்பக்க மோனோஷாக்கை அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பது ஆறுதல். மற்றபடி டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேம் - ஏபிஎஸ் உடன்கூடிய 300மிமீ/240மிமீ டிஸ்க் பிரேக் செட் அப் - 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் எனப் பல விஷயங்களில் G310R பைக்கை நினைவுபடுத்துகிறது G310GS. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாகக் காட்சிபடுத்தப்பட்ட இந்த பைக்கின் டிசைன் பணிகள், பிஎம்டபிள்யூவின் தலைமையிடமான ஜெர்மனியில் செய்யப்பட்டிருக்கிறது. 

 

Adventure Bikes


ஆனால் ஓசூரில் அமைந்திருக்கும் டிவிஎஸ் தொழிற்சாலையில், அட்வென்ச்சர் டூரரான  G310GS பைக்கின் உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன! 12V பவர் பாயின்ட், லக்கேஜ் கிட், சென்டர் ஸ்டாண்ட், சாட்டிலைட் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, Heated Grips, அட்ஜஸ்டபிள் சீட் ஆகியவை ஆக்ஸசரிஸில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 மற்றும் UM DSR அட்வென்ச்சர் பைக்கைப் பற்றி அடுத்து பார்ப்போம். 

 

 படங்கள்: Cycle World 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!