Published:Updated:

ரயில்வே ஸ்டேஷனில் தூக்கில் தொங்கிய வாலிபர்

ரயில்வே ஸ்டேஷனில் தூக்கில் தொங்கிய வாலிபர்
ரயில்வே ஸ்டேஷனில் தூக்கில் தொங்கிய வாலிபர்
ரயில்வே ஸ்டேஷனில் தூக்கில் தொங்கிய வாலிபர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியதால் பயணிகள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்!

செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் பயணிகள் நடைபாலத்திற்கு மேல், முப்பது வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கினார். காலையில் ரயில் நிலையம் வந்திருந்த பயணிகள் சிலர் இதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு  ஓடி ரயில்வே போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸார்,  பிணத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்த‌போது ‘‘தூக்கில் தொங்கிய நபர் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. நைலான் கயிற்றில் தூக்கு மாட்டப்பட்டுள்ளது. அவரே தூக்கு மாட்டிக் கொண்டாரா அல்லது வேறு யாரும் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டார்களா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்"" என்றனர்.

##~~##
தூக்கில் தொங்கிய வாலிபர் வெளிமாநிலத்துக்காரர் போல் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்து தொங்க விட்டிருப்பார்களா என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறது போலீஸ்.
அதிகாலையில் ரயில்வே ஸ்டேஷனில் தூக்கில் ஆண் பிணம் தொங்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
- கவிமணி
படம்: எஸ்.
கிருஷ்ணமூர்த்தி