ஏற்றுமதியில் சாதிக்க விரும்புகிறீர்களா? | Want to succeed in exports business?

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (25/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (25/06/2018)

ஏற்றுமதியில் சாதிக்க விரும்புகிறீர்களா?

உலக அளவில் இந்தியாவின் ஏற்றுமதியானது 2016-17-ம் ஆண்டில் 660.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த 2017-18-ம் ஆண்டில், 16.32 சதவிகிதம் உயர்ந்து 767.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

உலக அளவில் இந்தியாவின் ஏற்றுமதியானது 2016-17-ம் ஆண்டில் 660.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த2017-18-ம் ஆண்டில், 16.32 சதவிகிதம் உயர்ந்து 767.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
18 சதவிகிதமாக உள்ள இந்தியாவின் ஏற்றுமதியை, வரும் 2025-ம் ஆண்டுக்குள் 40 சதவிகிதமாக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு வரவும், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை
5 சதவிகிதமாக உயர்த்துவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்திய ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வர்த்தக அமைச்சகத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆக, இந்திய ஏற்றுமதித் துறையானது, தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய வருமானமீட்டும் துறையாக வளர்ந்துவருகிறது. எனவே, இத்துறையில் சாதிக்க நினைக்கும் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும்விதமாக, `ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்ற பெயரில் நாணயம் விகடன் சார்பாக ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு, சென்னையில் வரும் ஜூலை மாதம் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்,

1. ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பது எப்படி?

2. உண்மையான இறக்குமதியாளர்களை இனம் கண்டுகொள்வது எப்படி?

3. நாடுகள் மற்றும் பொருள்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்வது?

4. வெற்றிகரமாக ஏற்றுமதி தொழிலை செய்வது எப்படி?

ஆகியவை குறித்த முழுமையான பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

ஏற்றுமதி தொழில் செய்யும் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பயிற்சி வகுப்புக்கு கட்டணம் ரூ. 3,000/- மட்டுமே. இன்றே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும்.

பயிற்சியாளர்கள்:

கே.எஸ்.கமாலுதீன்

மேலாண்மை இயக்குநர்,
புளூபாரத் எக்ஸிம் பி. லிட்.,

எஸ்.சிவராமன்

வழக்கறிஞர்,
(Customs Advocate)

மேலும் விவரங்களுக்கு : +91- 99529 85143, +91- 9940415222

ஏற்றுமதி