Published:Updated:

இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை!

இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை!
இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை!
இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி: மீனவர்கள் கொலை வழக்கில் கைதான இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என்ற இத்தாலி அரசு அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இத்தாலி தூதரை நாட்டைவிட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் வாஹன்வதி தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில், இத்தாலி தூதர் டேனியல் மான்சினி, மறு உத்தரவு வரும்வரை இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.

##~~##
மேலும் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி, இத்தாலிய அரசு மற்றும்  கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் சொந்த ஊர் சென்று, திரும்பி வராமல் இருக்கும் இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இத்தாலி வீரர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பமுடியாது என்ற இத்தாலி அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பதிலடி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி இத்தாலி தூதரை நாட்டைவிட்டு வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.