வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (28/06/2018)

கடைசி தொடர்பு:08:02 (28/06/2018)

இந்த எஸ்யூவியில் 9 பேர் பயணிக்கலாம்... அறிமுகம் - மஹிந்திரா TUV 3OO ப்ளஸ்!

தனது பெயருக்கு ஏற்ப, TUV 3OO எஸ்யூவியைவிட, 401மிமீ கூடுதல் நிளத்தைக் கொண்டிருக்கிறது TUV 3OO ப்ளஸ் (4,400மிமீ). மற்றபடி 1,835மிமீ அகலம், 1,812மிமீ உயரம், 2,680மிமீ வீல்பேஸ் ஆகியவற்றில் பெரிய வித்தியாசமில்லை.

 

கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மஹிந்திராவின் டீலர்களில் காணப்பட்ட TUV 3OO ப்ளஸ், நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிவிட்டது! ஆம், P4 - P6 - P8 எனும் 3 வேரியன்ட்கள் - 5 கலர்களில் களமிறங்கியிருக்கும் இந்த எஸ்யூவியின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலைகள், முறையே 9.6 லட்சம் ரூபாய் - 9.96 லட்சம் ரூபாய் - 11 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு ஏற்ப, TUV 3OO எஸ்யூவியைவிட, 401மிமீ கூடுதல் நிளத்தைக் கொண்டிருக்கிறது TUV 3OO Plus (4,400மிமீ). மற்றபடி 1,835மிமீ அகலம், 1,812மிமீ உயரம், 2,680மிமீ வீல்பேஸ் ஆகியவற்றில் பெரிய வித்தியாசமில்லை. 

 

TUV 3OO ப்ளஸ்

 

 

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்


4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட TUV 3OO காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதால், C-பில்லர் வரை இரண்டு எஸ்யூவிகளுமே ஒன்றுதான்; TUV 3OO ப்ளஸ் மாடலின் பின்பக்க வடிவமைப்பில் (D-பில்லர்) மாற்றம் தெரிகிறது. 3-வது வரிசையில் மடிக்கக்கூடிய இரண்டு Side Facing சீட்கள் இருப்பதால்,  9 பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவியாக மாறியிருக்கிறது  TUV 3OO Plus. ஆனால் இதற்குத் தனியாக சீட் பெல்ட் வழங்கப்படவில்லை என்பது மைனஸ்.  

 

TUV 3OO Plus


TUV 3OO போலவே,  TUV 3OO ப்ளஸ் காரின் கேபின் வடிவமைப்பில், உலகப் புகழ்பெற்ற PininFarina நிறுவனம் பணியாற்றியிருக்கிறது. ஆனால் இரண்டு எஸ்யூவிகளின் கேபினும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கின்றன; அதேபோல டாப் வேரியன்ட்டில்தான் 7 டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கிலெஸ் என்ட்ரி, ரியர் வைப்பர் மற்றும் Defogger, Faux லெதர் சீட்ஸ், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இன்ஜின்

 

TUV 3OO Plus


இதில் 120bhp பவர் - 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் mHawk 120 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினில், தனது மைக்ரோ ஹைபிரிட், எக்கோ மோடு, ஏசி எக்கோ மோடு, பிரேக் எனர்ஷி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம் ஆகிய வசதிகளை சேர்த்துள்ளது மஹிந்திரா. 215/70 R16 சைஸ் வீல்கள் கொண்ட இந்த எஸ்யூவியின் கடைசி 2 வேரியன்ட்களில்தான், பாதுகாப்பு வசதிகள் (2 காற்றுப்பைகள், ABS, EBD) இடம் பெற்றுள்ளன என்பது நெருடல். 

 

முதல் தீர்ப்பு

 

TUV 3OO Plus

 

மஹிந்திரா நிறுவனம் இதைச் சொல்லாவிட்டாலும், TUV 3OO Plus கார் வாயிலாக, ஏறக்குறைய ஸைலோவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது எனலாம். அதன் வெளிப்பாடாக, அந்த எம்பிவியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் நுவோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. மாருதி சுஸூகி எர்டிகா, ரெனோ லாஜி, ஹோண்டா BR-V ஆகிய மோனோகாக் சேஸி கொண்ட எம்பிவிகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் TUV 3OO Plus-ஸை, லேடர் ஃப்ரேம் கொண்ட எஸ்யூவியாகப் பிரகடனப்படுத்துகிறது மஹிந்திரா. இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்கும் என்பது சந்தேகமாக இருந்தாலும், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் பிராக்டிக்காலிட்டியில் இந்த எஸ்யூவி ஸ்கோர் செய்கிறது. 60 லிட்டர் டீசல் டேங்க் கொண்ட TUV 3OO Plus, எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது, போகப்போகத் தெரியும்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்