Published:Updated:

இலங்கை தூதருக்கு சம்மன்: மீனவர்களை விடுக்க அறிவுறுத்தல்!

இலங்கை தூதருக்கு சம்மன்: மீனவர்களை விடுக்க அறிவுறுத்தல்!
இலங்கை தூதருக்கு சம்மன்: மீனவர்களை விடுக்க அறிவுறுத்தல்!
இலங்கை தூதருக்கு சம்மன்: மீனவர்களை விடுக்க அறிவுறுத்தல்!

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, டெல்லியில் செய்தியாளரை சந்தித் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் செய்யத் பக்ருதீன், இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். 

மேலும் தமிழக மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள இலங்கையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கூறினார். மீனவர்களை துன்புறுத்தவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை தூதரிடம் இந்தியா கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

##~~##
இதனிடையே இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை தூதரை நேரில் வரவழைத்து இனியும் இதுபோன்ற நடவடிக்கைகள தொடரக் கூடாது என கண்டிப்புடன் கூறுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கிக்ற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், " ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 53 மீனவர்கள் 9 விசைப்படகுகளில் 13-3-2013 அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னாருக்கு கொணடு சென்றுள்ளனர். இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கொண்டுள்ள வெறுப்புக்கு இச்சம்பவம் மற்றொரு உதாரணமாகும்.

எனவே, டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மீனவர்களை கைது செய்யக்கூடாது என்றும் கண்டிக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது எந்தவித குற்ற வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்யும்படி இலங்கைக்கு அறிவுறுத்த வேண்டும். எதிர்காலத்தில் தேவையில்லாமல் கைது செய்வதன்மூலம் ஆத்திரமூட்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்த வேண்டும்" என்று  கூறியுள்ளார்.