Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ஸ்கர் என்றால், விருதுகள் மட்டுமல்ல; சாப்பாடும் ஸ்பெஷல்தான். இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற சமையற்கலை வல்லுநர் வொல்ஃப்கேங்க் பக்கின் தலைமையில், 300 பேர் அடங்கிய சிறப்பு சமையல் வல்லுநர்கள் குழு, சுமார் 1,500 விருந்தினர்களுக்கு உணவு தயாரித்தது. ஒவ்வோர் உணவும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்ததுதான் இவர்களது மெனுவின் சிறப்பு அம்சம். பார்க்கவே ஜூஸியாக இருந்த சாலமன் மீன்கள், ஆஸ்கர் விருது வடிவத்திலேயே சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டன. வீகன், க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கான ஏரியாவும் தனியே ஒதுக்கப்பட்டிருந்தது. `நான் இங்கே வருவதே சாப்பிடுவதற்காகத்தான்' என ஜெனிஃபர் லாரன்ஸ் ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அடியாத்தி!

இன்பாக்ஸ்

  `நான் இறந்த பிறகு, எனது சொத்துகளை மகன் அபிஷேக்குக்கும் மகள் ஸ்வேதாவுக்கும் சரிசமமாகப் பிரித்து அளிக்கப்போகிறேன்' என்ற அறிவிப்புப்பலகையை ஏந்தியபடி போட்டோ ஒன்றை ட்வீட் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். பெண் குழந்தை களுக்கான ஐ.நா-வின் தூதுவராக இருக்கும் அமிதாப் பச்சன், பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்பதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் விதமாக இதைச் செய்திருக்கிறார். சூப்பர் ஜி சூப்பர் ஜி!

இன்பாக்ஸ்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் தமிழ்ப் படம், `இமைக்கா நொடிகள்'. `இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கியக் காரணம், எனக்குக் கிடைத்த ‘ருத்ரா’ கதாபாத்திரம். வழக்கமான வில்லன்கள்போல் குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்றில்லாமல், புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் செயல்படும் வில்லனாக நடித்திருக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் அனுராக்.
வாராய்... நீ வாராய்!

இன்பாக்ஸ்

  மீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாதான் டாப். குறிப்பாக, ஜிது ராய். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற கையோடு, 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் தங்கம் தட்டியிருக்கிறார் ஜிது. சகவீரர் அமன்பிரீத் முன்னணியில் இருக்க, வழக்கம்போல இறுதிச்சுற்றுகளில் நெருக்கடியைச் சமாளித்து, தங்கம் வென்றதோடு உலக சாதனையும் படைத்துவிட்டார். கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில், ஜிது - ஹீனா சித்து ஜோடி வென்றது தங்கம் என்றாலும், சோதனை அடிப்படையில் நடந்த போட்டி என்பதால், அந்தப் பதக்கம் கணக்கில் சேராது. ரியோ ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ராவுக்கு நிகராகப் பதக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தவர் ஜிது ராய். அவர் வெறுங்கையுடன் திரும்பியபோது நாடே பரிதாபப்பட்டது. இப்போது ஜிது ‘பேக் டு ஃபார்ம்’ வந்ததில் மகிழ்ச்சி. சு(ட்ட)த்தத் தங்கம்!

இன்பாக்ஸ்

மீபத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மகள் குர்மீர் கவுர், `என் அப்பா பாகிஸ்தானால் உயிரிழக்கவில்லை. போரில் உயிரிழந்தார்' என்று எழுதிய அட்டை வாசகத்துடன் ட்விட்டரில் போஸ்ட் போட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, சிலர் குர்மீர் கவுருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்குப்போனார்கள். இதற்கிடையே வீரேந்திர சேவாக்கும் குர்மீர் கவுரைப்போலவே `பாகிஸ்தானுக்கு எதிராக நான் சதங்கள் அடிக்கவில்லை. என் பேட்தான் அடித்தது' என போஸ்ட் போட `போருக்கு எதிரான ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், வீரேந்திர சேவாக்கிடமிருந்து இப்படி ஒரு ட்வீட்டா? என, சமூக வலைதளங்களில் சேவாக்கைத் துவைத்தெடுக்கிறார்கள். உங்களுக்கு லைக்ஸ் கிடைப்பது கஷ்டம்தான் ப்ரோ!

இன்பாக்ஸ்

சென்சார் போர்டுக்கும் பாலிவுட்டுக்கும் எப்போதும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான். `உட்தா பஞ்சாப்' படத்தைத் தொடர்ந்து, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்குச் சான்றிதழ் அளிக்க முடியாது எனக் கைவிரித்துவிட்டது சென்சார் போர்டு. படத்தின் வசனத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் இருந்ததே காரணமாம். `புர்காவும் லிப்ஸ்டிக்கும் ஒரே டைட்டிலில் எப்படி வரலாம்?’ எனப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கின்றன சில மதவாத அமைப்புகள். டோக்கியோ, மும்பை திரைப்பட விழாக்களிலெல்லாம் விருதை அள்ளிய இந்தப் படத்தின் இயக்குநர், அலங்ரிதா என்னும் பெண். படத்தின் நாயகி கொன்கனா சென். வாய் மை வெல்லட்டும்!