வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (01/07/2018)

கடைசி தொடர்பு:09:18 (01/07/2018)

ஹீரோ எக்ஸ்-பல்ஸ்... UM DSR II... இந்தியாவுக்கு வரும் அட்வெஞ்சர் பைக்ஸ்!

இம்பல்ஸ் பைக்கை நினைவுகூறும் விதமாகவே, இந்த பைக்குக்கு எக்ஸ்-பல்ஸ் எனப் பெயர் வைத்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் கேடிஎம் 390 அட்வெஞ்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS ஆகிய இரு அட்வெஞ்சர் பைக்குகளைப் பற்றி, கடந்த வாரம் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் இரு அட்வெஞ்சர் பைக்குகள் இணைந்திருக்கின்றன. இதில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹீரோ எக்ஸ்-பல்ஸ் பைக்கும், அடுத்த ஆண்டில் UM நிறுவனத்தின் DSR பைக்கும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்-பல்ஸ்

ஹீரோ

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் EICMA 2017 மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்-பல்ஸ் கான்செப்ட், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது தெரிந்ததே! ஆனால், இங்கு அறிமுகமான பைக்குகள் இரண்டுக்கும் சில வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவை இரண்டுமே Proto type மாடல்கள் என்பதுடன், ஆன்ரோடுக்கு வரும் பைக் ஏறக்குறைய இதைப்போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்பல்ஸ் பைக்கை நினைவுகூரும்விதமாகவே, இந்த பைக்குக்கு `எக்ஸ்-பல்ஸ்' எனப் பெயர் வைத்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். 

எக்ஸ்-பல்ஸ்

ஒரு அட்வெஞ்சர் பைக்குக்குத் தேவையான 220மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ், ஆஃப்ரோடு டயர்கள், பெரிய விண்ட் ஸ்க்ரீன், கச்சிதமான சீட் உயரம் (825மிமீ), கால்களுக்கு சப்போர்ட் தரும் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், நீளமான சிங்கிள் பீஸ் சீட், ஷார்ப்பான மட்கார்டு ஆகியவற்றைக்கொண்டிருக்கிறது ஹீரோ எக்ஸ்-பல்ஸ். இதனுடன் இன்ஜினுக்குப் பாதுகாப்பு தரும் Drilled Bash Plate மற்றும் ரைடருக்குப் பாதுகாப்பு அளிக்கும் க்ராஷ் கார்டு ஆகியவை போனஸ்! ஏற்கெனவே விற்பனை செய்த இம்பல்ஸ் பைக்கைவிட அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் டிராவலை எக்ஸ்-பல்ஸ் கொண்டிருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது. 

Hero

Enduro பைக்குகளில் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் இருப்பதுபோன்ற ஹேண்டில்பார் மற்றும் அதற்கு மேட்சிங்காக கார்டு, கியர் இண்டிகேட்டர் - Distance To Empty - ப்ளூடூத் - சாட்டிலைட் நேவிகேஷன் உடனான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச் போன்ற சிறப்பம்சங்களைக்கொண்டிருக்கும் எக்ஸ்-பல்ஸ் பைக்கில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் அதே 200சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ளது ஹீரோ. ஆனால், அட்வெஞ்சர் பைக்குக்கு ஏற்ப இதன்  ஸ்ப்ராக்கெட் - டியூனிங் ஆகியவை மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. கார்ப்பரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும் எனலாம்.

Xpulse

Single Downtube சேஸி - Box Section ஸ்விங்-ஆர்ம் அமைப்பைக்கொண்டுள்ள எக்ஸ்-பல்ஸ் பைக்கை, கடந்த 2017 Raid de Himalaya ராலியில் டெஸ்ட் செய்திருக்கிறது ஹீரோ. முன்பக்கத்தில் 21 இன்ச் ஸ்போக் வீல் - சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான பெட்டல் டிஸ்க் பிரேக் - 190மிமீ டிராவலுடன்கூடிய டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் - சிறிய பெட்டல் டிஸ்க் பிரேக் - 170மிமீ டிராவலுடன்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் போன்ற மெக்கானிக்கல் பாகங்களைக்கொண்டுள்ளது எக்ஸ்-பல்ஸ். பல்ஸர் NS200, அப்பாச்சி RTR 200 பைக்குகளின் விலையில், இந்த பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்தும் என நம்பலாம். 

UM DSR

UM DSR II

பிஎம்டபிள்யூ, கேடிஎம், ஹீரோ என பைக் நிறுவனங்கள் வரிசையாக அட்வெஞ்சர் பைக்குகள் பக்கம் தமது கவனத்தைத் திருப்பிவருகின்றன. இதன் வெளிப்பாடாக, தான் உலகச் சந்தைகளில் விற்பனை செய்யும் HyperSport மற்றும் DSR II எனும் இரு டூயல்-ஸ்போர்ட் வகை பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முடிவில் UM நிறுவனம் இருக்கிறது. இந்த இரு பைக்குகளை, நம் ஊர் சந்தைக்கு ஏற்ப இந்த நிறுவனம் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி சர்வதேச மாடலில் USD ஃபோர்க் - BlindSpot உடனான மிரர்கள் - ஜெல் பேடு உடனான சீட் - Anti Flat Sealent டயர்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக, வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்  - சிங்கிள் பீஸ் சீட் - ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இடம்பெறும் எனத் தெரிகிறது.

யுஎம் DSR II

ஆனால், டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், LED லைட்டிங், USB சார்ஜிங் போர்ட், மோனோஷாக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக்ஸ் ஆகியவை வழங்கப்படலாம். இதில் சிங்கிள் சேனல் அல்லது டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. HyperSport மற்றும் DSR II பைக்கில், இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ள ரெனிகாடே Duty பைக்கில் இருக்கும் 223சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ளது UM. UnderSeat எக்ஸாஸ்ட் கொண்ட இந்த இன்ஜின் அளவில் எக்ஸ்-பல்ஸ் பைக்கைவிடப் பெரிதாக இருந்தாலும், HyperSport வெளிப்படுத்துவதோ 16bhp பவர் மற்றும் 1.77kgm டார்க் மட்டுமே. இதுவே DSR II பைக் என்றால், அது வெளிப்படுத்துவதோ 15.7bhp பவர் மற்றும் 1.67kgm டார்க்தான்! எக்ஸ்-பல்ஸ் விலையிலேயே அந்த பைக்குக்குப் போட்டியாக இவை வெளிவரலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்