'காலா-சரீனா' புகழ் ஹுமா குரேஷியின் புதிய பென்ஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய லேண்ட்ரோவர் ஃப்ரிலேண்டர் 2 எஸ்யூவி, இவரது மனதுக்கு நெருக்கமான காராக இருக்கிறது!

எஸ்யூவி (SUV)... இந்தியாவில் புதிதாக கார் வாங்க விரும்பும் பலரது ஆசை இதுவாகத்தான் இருக்கும்; பாலிவுட் நட்சத்திரங்களுக்கு, அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்த வரிசையில், தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர், காலாவில் ரஜினியின் காதலியாக நடித்த ஹுமா குரேஷி!

 

காலா

 

ஆம், மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் GLE எஸ்யூவியை வாங்கியிருக்கும் இந்த டெல்லி நடிகை, அதன் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.   


சரீனாவிடம் இருக்கும் கார்கள் என்னென்ன?

 

ஹியூமா குரேஷி


ஹுமா குரேஷியின் கல்லூரிக் காலத்தில், அவரது தந்தை அவருக்கு மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுவே அவரது முதல் காராக இருந்தாலும், கடந்த 2013-ம் ஆண்டில், தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய லேண்ட்ரோவர் ஃப்ரிலேண்டர் 2 எஸ்யூவி, இவரது மனதுக்கு நெருக்கமான காராக இருக்கிறது; தற்போது, படத்தில் இருக்கும் சில்வர் நிற மெர்சிடீஸ் பென்ஸ் GLE, இவரது புதிய விருப்பமாக இணைந்திருக்கிறது. ஆனால், இவர் வாங்கியது என்ன வேரியன்ட் என்பது தெரியவில்லை. மேலும் ஸ்விஃப்ட், ஃப்ரிலேண்டர், GLE என எதுவாக இருந்தாலும், அந்த மாடலின் உற்பத்தி ஏறக்குறைய முடியும் தருவாயில்தான் அவற்றை வாங்கியிருக்கிறார் சரீனா... சாரி ஹுமா குரேஷி!


மெர்சிடீஸ் பென்ஸ் GLE எஸ்யூவியின் டெக்னிக்கல் விவரங்கள்!

 

Huma Qureshi


சென்னை ஆன்-ரோடு விலையான 81.34 முதல் 94.58 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மெர்சிடீஸ் பென்ஸ் GLE, இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1 பெட்ரோல்/2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. M-க்ளாஸாக இருந்து, பின்னர் பேஸ்லிஃப்ட்டின்போது GLE ஆக மாறிய இந்த எஸ்யூவியில், LED ஹெட்லைட்  மற்றும் டெயில் லைட் - ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி - டிரைவர் சீட் மெமரி - கீலெஸ் கோ - COMAND உடனான 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - 5 டிரைவிங் மோடுகள் - AIRMATIC சஸ்பென்ஷன் போன்ற பல வசதிகளைக்கொண்டிருக்கிறது. ஆடி Q5, பிஎம்டபிள்யூ X5, ஜாகுவார் F-பேஸ், வால்வோ XC60 ஆகிய லக்ஸுரி எஸ்யூவிகளுடன் போட்டிபோடுகிறது மெர்சிடீஸ் பென்ஸ் GLE.


இன்ஜின் ஆப்ஷன்கள் என்ன?

 

GLE - Zareena


இந்த மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்யூவியின் பிரபலமான, அதே சமயம் ஆரம்ப வேரியன்ட்டான GLE 250d-யில் இருப்பது, 204bhp பவர் மற்றும் 50kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின்; விலை அதிகமான GLE 350d வேரியன்ட்டில் இருப்பதோ, 258bhp மற்றும் 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் V6 ட்வின் டர்போ டீசல் இன்ஜின். இதுவே பெட்ரோல் மாடல் (GLE 400) என்றால், அதில் இருக்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 இன்ஜின், 333bhp மற்றும் 48kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதே எஸ்யூவியின் AMG GLE 43 கூபே மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 பெட்ரோல் இன்ஜின், 367bhp மற்றும் 52kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின்கள் அனைத்தும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!