Published:Updated:

இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க விமான நிலையங்கள் உஷார்!

புதுடெல்லி: இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. :
 
கேரள கடற்பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், பரோலில் சென்ற அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி மறுத்துவிட்டது. இது இரு நாட்டு தூதரக உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
 
##~~##
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கைதிகள் இருவரும் பரோலில் சென்று வர உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் டேனியல் மன்சினி, இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று தடைவிதித்துள்ளது.
 
இதையடுத்து இத்தாலி தூதர், இந்தியாவில் இருந்து வெளியாறாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது.. இதுதொடர்பாக விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.