மெஸ்ஸி, நெய்மர், சுவாரெஸ் என ஏராளமான நட்சத்திரங்களைக்கொண்ட சூப்பர் கால்பந்து அணி, ஸ்பெயினின் பார்சிலோனா அணி. சாம்பியன்ஸ் லீக் தொடரில் அப்படிப்பட்ட அணி தோல்வியைத் தழுவினால் என்ன ஆகும்? ரசிகர்கள் அனைவரும் பதறிவிட்டார்கள். சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியில் பார்சிலோனா அணியை பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஜி அணி 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனாவுக்கு இது மிகப்பெரிய தலைக்குனிவாக இருந்தது. ரசிகர்கள் எல்லாம் இதைப் பெரிய அவமானமாக நினைத்துக்கொண்டிருக்க, இரண்டாவது போட்டியில் அதே பி.எஸ்.ஜி அணியை ஆறு கோல்கள் அடித்துத் தோற்கடித்து இழந்த பெருமையை மீட்டெடுத்திருக்கிறது பார்சிலோனா அணி. கடைசி ஏழு நிமிடங்களில் மட்டும் மூன்று கோல்கள் போட்டதை பி.எஸ்.ஜி அணி வாழ்நாளில் மறக்காது. நான் அடிச்சா தாங்க மாட்ட!

தான் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சந்தானத்தின் `சக்கபோடு போடு ராஜா' படத்துக்கு அத்தனை பாடல்களையும் இசையமைத்துப் பதிவுசெய்துவிட்டார் சிம்பு. சந்தானத்தின் இன்ட்ரோ பாடலை அனிருத்தும், இன்னும் இரண்டு பாடல்களை இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜாவும் லியோன் ஜேம்ஸும் பாடியிருக்கிறார்கள். கூடவே ஒரு பாடலில் அப்பா டி.ஆரையும், அம்மா உஷாவையும் பாடவைத்திருக்கிறார் எஸ்.டி.ஆர். டண்டனக்கா..!

`காற்றுவெளியிடை' படத்துக்கு அடுத்து, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை இயக்குகிறார் மணிரத்னம். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தில் ராம்சரணோடு அர்விந்த் சுவாமியும் நடிக்க இருக்கிறாராம். படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும், ராம்சரணின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனவாம். இன்னோர் `அக்னிநட்சத்திரம்' பார்ர்ர்சேல்!

சர்வதேசப் பெண்கள் தினத்துக்காக, அமெரிக்க வால் ஸ்ட்ரீட் மட்டுமே இரண்டு மில்லியன் டாலர் வரை செலவிட்டுள்ளது. இதில் ஹைலைட் விஷயம், வால் ஸ்ட்ரீட்டை அலங்கரிக்கும் `பாயும் எருது சிலை'யின் முன்பு நிற்கவைக்கப்பட்ட சிறுமியின் சிலை. முறைத்துக்கொண்டு நிற்கும் எருதின் முன், கம்பீரமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு எருதை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் சிறுமியின் சிலை திறக்கப் பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலத்துக்கு அங்கே அந்தச் சிலை நிற்கவைக்கப் பட்டிருக்குமாம். இது ஒரு பக்கம் என்றால், வால் ஸ்ட்ரீட்டுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது டூடுளில் உலகின் முக்கியமான பல பெண்களை வரிசைப்படுத்தி சிறப்பு செய்தது. அமெரிக்காவின் முதல் பெண் பத்திரிகையாளர் இடா பெல்ஸ் தொடங்கி, முதல் பெண் விண்வெளி வீராங்கனை சாலி ரைட் வரை பலரின் பெயர் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், இந்தியாவிலிருந்து பிரபல நாட்டியக் கலைஞர் ருக்மினிதேவி அருண்டேல் பெயரும் இடம்பெற்றிருந்தது ஹைலைட். மகளிர் சக்தி!

மைக்கேல் ஜாக்சன் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய `த்ரில்லர்' இசை ஆல்பத்தையும், அதில் வரும் `பீட் இட்'ஐயும் மறக்கவே முடியாது. இந்த இசை ஆல்பத்துக்கு இன்னமும் மவுசு குறையவே இல்லை. இன்றும் எல்லா ரெக்கார்டுகளையும் முறியடித்து, இந்த ஆல்பம்தான் முன்னணியில் இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம் இதுதான் என சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். கூடவே இந்த ஆல்பத்துக்கு Recording Industry Association of America (RIAA) அமைப்பு வைர விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. பீட் இட்!

அடிக்கடி மேற்கூரை இடிந்து விழும் சென்னை விமானநிலையம்தான் இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் நம்பர் 1 விமானநிலையம். கடந்த ஆண்டு மட்டும் 451 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, சென்னை விமானநிலையம். சமீபத்தில் கட்டப்பட்ட ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமானநிலையங்கள் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. சென்னைதான் கெத்து!