வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:08:00 (04/07/2018)

இனி ஆக்டிவா 125-ல் LED ஹெட்லைட், புதிய சஸ்பென்ஷன்...மற்றும் பல

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அப்டேட் ஆகிவிட்டது. LED ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சர்வீஸ் இண்டிகேட்டர், எகோ மோடு இண்டிகேட்டர், 4-in-1 இக்னிஷன், சீட்டை திறப்பதற்கான தனி ஸ்விட்ச் என ஆக்டிவா 5G-யில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இப்போது ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலேயே வந்துவிட்டது. 

ஆக்டிவா 125

அழகுக்கான புதிய  மாற்றங்களாக மிட் மற்றும் டாப் வேரியன்டில் கிரே அலாய் வீலும், டாப் வேரியன்டில் கிரோம் muffler cover-ம் சேர்க்கப்பட்டிருக்கிறது. matte crust metallic மற்றும் matte selene silver metallic என இரண்டு புதிய மேட் நிறங்களிலும் வருகிறது. மொபைல் சார்ஜர் வழக்கம்போல ஆப்ஷனலாகவே கிடைக்கிறது. 

new activa 125

ஆக்டிவா 125-ன் பின்பக்கத்தில், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் புதிது. முன்பக்கத்தில் அதே டெலஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷன்தான். இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 8.52bhp பவர் மற்றும் 10.54Nm டார்க் தரக்கூடிய 124.9cc HET இன்ஜின்தான். பேஸ் மற்றும் மிட் வேரியன்டில் டிரம் பிரேக் வருகிறது. டாப் வேரியன்டில் மட்டுமே முன்பக்க டிஸ்க் பிரேக் வருகிறது. எல்லா வேரியன்டிலுமே காம்பி பிரேக்கிங் வசதி இருக்கிறது. இதே வசதிகளோடு சமீபத்தில் ஹோண்டா தனது டியோ ஸ்கூட்டரையும் அப்டேட் செய்திருந்தது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட சுஸூகி ஆக்ஸஸ் அதிக அளவில் விற்பனையாகிறது. 125 ஸ்கூட்டர் போட்டியில் இப்போது என்டார்க்கும், கிராஸியாவும் அதிக விற்பனையைக் கொண்டிருக்கிறது என்பதால். இந்த அப்டேட்டுகள் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம் என நினைக்கிறது ஹோண்டா. புதிய வசதிகளோடு சேர்த்து ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலை ரூ.2000 அதிகரித்துவிட்டது. தற்போது, ஆக்டிவா 125, ரூ.75,400 (சென்னை ஆன்ரோடு) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.