மரம் வளர்ப்போம்! பசுமை காப்போம்... பள்ளிச் சிறுவர்கள் நடத்திய பேரணி

மரம் வளர்ப்போம்! பசுமை காப்போம்... பள்ளிச் சிறுவர்கள் நடத்திய பேரணி

இந்த உலகம் தன்னை அடுத்தடுத்த நகர்வை நோக்கி புதுப்பித்திக்கொண்டே வருகிறது. இந்தப் பூமியின் பசுமையை நாம் தொடர்ந்து அழித்துவருகிறோம். வளர்ச்சி என்கிற பெயரில், நம் தேவைக்காகக் காடுகளை எல்லாம் தொடர்ந்து அழித்துக்கொண்டு இருக்கிறோம். 

School kids

சென்னையில் இருக்கும் ஆல்பா பள்ளி சார்பாக, குழந்தைகளை வைத்து பசுமைப் பேரணி ஒன்றை இந்த வாரம் நடத்தியுள்ளனர். இந்தப் பூமி இன்னும் சில காலம் தொடர்ந்து பசுமையுடன் இயங்க, நாம் தொடர்ந்து மரங்களை வளர்க்க வேண்டும். சிறுவர்கள் மரங்களைக் காக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வுடனும் ஆர்வத்துடனும் ஸ்லோகங்களையும் பேனர்களையும் உருவாக்கி அசத்தினர். பூமியின் நுரையீரலான இந்த மரங்களைப் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து நாமும் பேணிக் காப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!