2019 பிஎம்டபிள்யூ G310R பைக்கில் என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் வருகின்ற 18-ம் தேதியன்று, தனது G310R மற்றும் G310GS பைக்குகளைக் களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ. இதற்கான புக்கிங், சரியாக ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கிவிட்டது! ஆனால் உலக சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பைக்கின் 2019-ம் ஆண்டுக்கான மாடலை, இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் நீல நிறத்துக்குப் பதிலாக, சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது; கறுப்பு நிறம் தொடரும் எனத் தெரிகிறது. மற்றபடி மெக்கானிக்கலாக G310R பைக்கில் எந்த மாறுதலும் இல்லை. 

 

பிஎம்டபிள்யூ G310R


ஜெர்மானிய நிறுவனமான பிஎம்டபிள்யூவின் விலை குறைவான மாடலாக இருக்கும் G310R பைக்கை, ஒசூரில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது! நிலைமை இப்படி இருக்க, மிகவும் தாமதமாகவே இந்த பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட உள்ளது. டீலர் நெட்வொர்க்கை அதிகப்படுத்தியதுதான் காலதாமதத்துக்கான காரணம் என பிஎம்டபிள்யூ தெரிவித்திருந்தது. கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக G310R பைக்கைக் காட்சிபடுத்தப்பட்டது; அதேபோல 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான், G310GS பைக் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.  

 

BMW G310R


G310R மற்றும் G310GS  ஆகிய இரண்டு பைக்கிலும் இருப்பது, 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் 313சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்டீல் டியூப்லர் ஃப்ரேம், ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ், 5 ஸ்போக் அலாய் வீல்கள் என மெக்கானிக்கல் பாகங்களிலும் இந்த பைக்குகளில் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. இதில் G310R மற்றும் G310GS பைக்குகளின் உத்தேச விலை, முறையே 3.5 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை லேட்டாக ஆட்டத்துக்கு வந்தாலும், லேட்டஸ்ட்டாக வருவதால், விலையில் ஏதேனும் சர்ப்ரைஸ் காட்டுமா பிஎம்டபிள்யூ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!